பிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (88)
Share
Advertisement
PM Modi, Modi, Congress, corona update, India, India fights corona, coronavirus crisis,
பிரதமர்,மோடி,காங்கிரஸ்,பாராட்டு

புதுடில்லி: மத்திய அரசின், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, காங்., மூத்த தலைவர்கள் பாராட்டி வருவது, கட்சி மேலிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள, 21 நாள் ஊரடங்கு குறித்து, காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர், விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மக்கள் ஊரடங்கின் போது, கைகளை தட்டுமாறு, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, ராகுல் கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசை, எப்போதும் விமர்சித்து வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கொரோனா விவகாரத்தில், மோடியின் நடவடிக்கைகளுக்கு, ஆதரவு தெரிவித்து வருகிறார். 'ஊரடங்கை எதிர்ப்பவர்கள், அடுத்த, 21 நாட்களுக்கு அமைதி காப்பது நலம்' என, அவர் கருத்து தெரிவித்தார்.


latest tamil news



மேலும், ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், லோக்சபா எம்.பி., சசி தரூர் உள்ளிட்ட மூத்த காங்., தலைவர்களும், பிரதமரின் நடவடிக்கைகளுக்கு, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இது, காங்., மேலிடத்தை கொந்தளிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, காங்., தலைமைக்கும், அதன் மூத்த தலைவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மூத்த காங்., தலைவர்கள் மற்றும் ராகுல் இடையே, கருத்து வேறுபாடு ஏற்படுவது புதிதல்ல என்றும், இக்கட்டான சூழலில் நாடு சிக்கித் தவிக்கும் போது, மத்திய அரசை விமர்சிப்பது முறையல்ல என, காங்., மூத்த தலைவர்கள் பலரும் நினைப்பதாக, கூறப்படுகிறது. மேலும், ராகுலை மீண்டும் கட்சி தலைவராக்கும் முயற்சியில் சோனியா இறங்கியதை அடுத்து, கட்சி தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே, உரசல் அதிகரித்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஏப்-202018:09:33 IST Report Abuse
Endrum Indian நம்பாதே நம்பாதே முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரஸ் ...
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
04-ஏப்-202017:32:55 IST Report Abuse
chander வெட்ட போகிற ஆட்டுக்கு சாபிராணியும் பூமாலையும் போல ஆதரவு
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
04-ஏப்-202017:31:17 IST Report Abuse
chander k ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X