ஊரடங்கு உத்தரவு, தைரியமான நடவடிக்கை: உலக சுகாதார அமைப்பின் தூதர்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
ஜெனீவா: “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, மிக தைரியமான நடவடிக்கையை இந்திய அரசு எடுத்துள்ளது,” என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ பாராட்டியுள்ளார்.இந்தியாவில், கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, மத்திய - மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு
WHO, India, Lockdown, coronavirus, coronavirus update, coronavirus news,
ஊரடங்கு,  கொரோனா, உலகசுகாதாரஅமைப்பு

ஜெனீவா: “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, மிக தைரியமான நடவடிக்கையை இந்திய அரசு எடுத்துள்ளது,” என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ பாராட்டியுள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, மத்திய - மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பிற்கான சிறப்பு தூதர், டேவிட் நபாரோ, இந்திய அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று(ஏப்.,3) அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ், வேகமாக பரவக்கூடிய தொற்று ஆகும். ஆகையால், அந்த வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களையும் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். இதைத்தவிர, பாதிக்கப்பட்ட நாடுகள், வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவேண்டும். அதன்மூலம் தான், மக்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும். இந்தியாவில், அந்த நடவடிக்கை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது.வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதே, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது மிகச் சரியான முடிவு.


latest tamil newsசமூக விலகலை பின்பற்றாமல் இருந்தால், வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்திய மக்கள் உணர்ந்துவிட்டனர்.எனினும், இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது வேதனை அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதை அறிந்தும், மிக தைரியமாக, அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு, நான் பாராட்டுகிறேன். இந்தியா, இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன், புதிய பாதிப்புகள் ஏற்படாது என நான் நம்புகிறேன். பிற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதால், எந்த பலனும் இல்லை. கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்த சில நாடுகள், கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை நான் தற்போது காண்கிறேன். அங்கு, அழுத்தத்தில் பணியாற்றிய பல சுகாதார ஊழியர்களும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை நான் பார்க்கிறேன்.

கொரோனா வைரசின் தன்மை குறித்து, நமக்கு தெரியாது. வைரஸ் பரவல் குறையுமா அல்லது மேலும் மோசமடையுமா என்பதை, வரும் காலம் தான் நிர்ணயிக்கும். நமக்கு தெரிந்தவரை, இந்த வைரஸ், நான்கு மாத காலமாக உள்ளது. வெயில் காலத்தில், இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. இந்தியாவில் தற்போது வெயில் காலம் தொடங்கவுள்ளது. ஆகையால், அங்கு என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக காத்திருக்கிறேன். நிலைமை மோசமாக மாறாது என நான் முழுமையாக நம்புகிறேன். வரவிருக்கும் வெயில் காலம், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என, நினைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
04-ஏப்-202019:42:41 IST Report Abuse
S.kausalya நாடக காட்சியாக தவ புதல்வன் படத்தில் வரும். ஒரு புலவன் இசை மீட்டி விளக்கு ஏற்றி இளவரசியின் நோய் தீர்த்தான் என்று பார்த்தோமே. அக்பரின் பெண், புலவர் தான்சென் என நினைக்கிறேன். அப்போது இச்சம்பவம் உண்மையில் நடந்தது என்றும், வரலாறும் ஆதாரம் உள்ளது என்றும் கண்ணதாசன் சொன்னதாக.சொல்வார்கள். நிஜமா என தெரியவில்லை.
Rate this:
Cancel
04-ஏப்-202018:57:34 IST Report Abuse
ஆப்பு கவலையே படாதீங்க... இன்னிக்கி வெளக்கேத்தி, செப்டம்பர் வரை நீட்டிச்சுருவோம்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-202017:24:49 IST Report Abuse
Tamilan மற்ற நாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது மிக பெரிய விஷயம் தான் . காரணம் தப்பினால் மரணம் போன்றதுதான் . அதனால்தான் இந்தியாவும் தாமதமாக செய்தது . அதனால்தான் இவர்கள் முன்னரே இப்படி செய்ய சொல்லி உலக நாடுகளை வற்புறுத்தவில்லை . வற்புறுத்துவதற்ற்கு ஆதாரம் தேடுவதற்கு முன் கட்டுக்கடங்காமல் போய்விட்டது . போக தீண்டாமையை முன்னிறுத்தினால் இவர்களின் வேஷம் களைந்து விடும் , தன்மானதிற்கு பெரும் சவாலாகிவிடும் என்று எண்ணியதுதான் காரணம் . இதெற்கெல்லாம் இவர்கள் ஆதாரம் தேடியிருக்கக்கூடாது . பாதிப்பட்டவருக்கே தெரியாமல் பரவ வாய்ப்புள்ளது என்று தெரிந்த போதே ஒட்டுமொத்த சீனாவுடனான தொடர்புகளை துண்டித்திருக்கவேண்டும் . தங்கள் நாட்டில் நடப்பதை பற்றி முழுதும் தெரிந்த சீனா இதை முன்னின்று செய்திருக்கவேண்டும் . மேலும் டிசம்பரிலிருந்து சீனர்கள் எங்கெங்கெல்லாம் சென்றார்களோ அதையெல்லாம் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டங்களில் ஒதுக்கி வைக்கும் முறையை அப்போதே செய்திருக்க வேண்டும் . ஓரிரு மாத தாமதமான நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுதான் இது . இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை வீட்டோவுடன் கூடிய நிரந்தர உறுப்பினராக வைத்திருக்கவேண்டும் என்பதற்கு இதை விட இன்னொரு ஆதாரம் வேண்டும் எதிர்பார்ப்பது , இவர்கள் எந்த ஜென்மத்திலும் திருந்த மாட்டார்கள் என்றுதான் அர்த்தம் . குறைந்தபட்சம் சீனாவிடம் உள்ள veto உரிமையையாவது பறிமுதல் செய்யவேண்டும் அல்லது தற்காலிகமாக ஒரூ வருடத்திற்காவது நிறுத்திவைக்க வேண்டும். இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் இதேபோன்ற , இதை விட பெரிய பல சூழ்நிலைகளுக்கு உலக நாடுகளை தயார்படுத்திக்கொள்ள இவர்கள்தயாராக இருக்கவேண்டும் . இல்லையெனில், இதைவிட மிகபெரிய பேரழிவுகளை சந்திக்க நேரிடலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X