மாஸ்க் அணிய மாட்டேன்: டிரம்ப்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
Donald Trump, America President, Mask, Trump, Corona outbreak, coronavirus, 
டிரம்ப்,டொனால்டு டிரம்ப்,மாஸ்க்,முககவசம்,கொரோனாவைரஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க, அனைவரும் மாஸ்க் அணியும் படி வலியுறுத்தும், தான் மாஸ்க் அணியப் போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, அமெரிக்காவையும் ஆட்டி படைக்கிறது. அங்கு மட்டும் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டு, 7,402 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, உடல்நலம் சரியில்லாதவர்கள் மற்றும் கொரோனா தொற்று இருப்பவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், வைரஸ் பரவுவதை தடுக்க, மாஸ்க் அணிவது முக்கியம் என புதிய ஆய்வுகள் கூறுகின்றன.


latest tamil news


இதனால், தற்போது, அனைவரும் சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிவது போன்றவற்றை கடைபிடிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: மாஸ்க் அணிய வேண்டும் என புதிய மருத்துவ ஆய்வுகள் பரிந்துரைத்தாலும், நான் மாஸ்க் அணிய மாட்டேன். தனது அலுவலகத்தில் அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசர்கள், இளவரசிகள் என யாரேனும் வருகைத் தரும்போது தன்னால் மாஸ்க் அணிந்துகொண்டு அவர்களை வரவேற்க முடியாது. இதனால் மாஸ்க் அணியப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
04-ஏப்-202016:08:18 IST Report Abuse
aryajaffna இருந்தால் தானே அணிவதற்கு, அதற்கும் சீனாவிடம் தான் பிச்சை எடுக்க வேண்டும்
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
06-ஏப்-202005:03:44 IST Report Abuse
Rajeshஆப்பு ரெடியாகுது, பிச்சை கேட்டு வந்த அடிமைகளை, நாடே விட்டு வெளிய தள்ளி கதவை மூட பொறுத்திருந்து பாருங்கள்......
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
04-ஏப்-202015:28:37 IST Report Abuse
chander நீங்க என்ன பிஸ்தாவா எங்க பிரதமரும் மாஸ்க்கும் அணியமாட்டார் வெளியில் தலையும் காட்டமாட்டார்
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
04-ஏப்-202015:12:05 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga அது வேறு ஒன்னும் இல்லீங்க. அந்த மாஸ்க் சீனாவில் உற்பத்தி ஆகி இங்க வந்திருக்கு. அதான். அவரு சீனா பொருளையே யூஸ் பண்ண மாட்டாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X