கொரோனாவால் பலியாகும் போலீசுக்கு ரூ.50 லட்சம்: அஜித் பவார்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
CoronaVirus, police, 50 lakhs, maharashtra, Ajit Pawar, covid 19, கொரோனா வைரஸ், போலீஸ், உயிரிழப்பு, 50லட்சம், நிதி, மஹாராஷ்டிரா, அஜித்பவார்

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பல மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலானதால் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி பலர் பொறுப்பை உணராமல் சாலையில் சுற்றித்திரிகின்றனர். இதனால், போலீசுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அஜித் பவார் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் போலீஸ், சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் யாரும் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
04-ஏப்-202018:51:14 IST Report Abuse
.Dr.A.Joseph அப்ப சாதாரண குடியானவன் செத்தா அநாதை பொணமா ?
Rate this:
Cancel
04-ஏப்-202017:28:28 IST Report Abuse
ஆப்பு போலீசுக்கு கொரோனா வராது. வெட்டியா சுத்தறவங்களுக்குத்தான் வரும்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-ஏப்-202016:57:14 IST Report Abuse
J.Isaac நிச்சயம் உயிர் சேதம் வராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X