செப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்: ஆய்வில் தகவல்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (69)
Share
Advertisement
CoronaVirus, India, lockdown, september, india fights corona, covid 19, corona, country wide lockdown, curfew, கொரோனா வைரஸ், இந்தியா, ஊரடங்கு, செப்டம்பர், நீடிக்கும், ஆய்வு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது. சமூக பரவலை தடுக்க ஏப்.,14 வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஏப்.,14க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.


latest tamil news


பிஸினஸ் டுடே மற்றும் மணி கண்ட்ரோல் தளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் ஆலோசனை குழு, ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தேதி, முழு ஊரடங்கா? அல்லது பகுதி ஊரடங்கா? நோய் உச்சமடையும் காலம் போன்ற தரவுகளை மதிப்பீடு செய்து, எந்த நாட்டில், எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என அறிக்கை அளித்துள்ளது. அதில் தான் இந்தியாவில் ஜூன் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்கு முன்பு ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என கூறியுள்ளது.


latest tamil news


ஒரு லட்சம் பேருக்கு எத்தனை உள்நோயாளி படுக்கைகள் உள்ளன, ஒரு லட்சம் பேரில் எத்தனை பேருக்கு சுவாச நோய்கள் உள்ளன, தொற்று நோயை சமாளிக்கும் திறன் ஆகிய காரணிகளும் இதில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் உள்நோயாளி படுக்கைகள் குறைவாகவும், சுவாச நோய் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், தொற்று நோயை சமாளிக்கும் திறன் மோசமாகவும் உள்ளதாக பாஸ்டன் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. தற்போது நிலைமை மோசமாக உள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஜூன் 3-வது வாரம் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் என இந்த ஆய்வு அதிர்ச்சித் தருகிறது. சமூக விலகல் மற்றும் தூய்மையை கடைப்பிடிப்பது ஒன்றே பேராபத்தில் நம்மை காப்பாற்றும்.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
05-ஏப்-202012:31:23 IST Report Abuse
தமிழ்வேள் கிராமங்கள் எப்போதும் போலவே அமைதியாக நடமாட்டமின்றி இருக்கின்றன ..சாதாரணமாகவே கிராமங்களில் வெட்டியாக சுற்றுதல் போன்றவை குறைவு சாதாரண நாட்களிலேயே தெருக்களும் ரோடுகளும் வெறிச் என்றுதான் இருக்கும் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பவர்கள் அதிகம் ..அதிகபட்சம் திண்ணையோடு சரி ....அதிகமாக பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு போனது நகரங்கள் மட்டுமே ..தெருவில் திரியாமல் இருக்க முடியாத நகரவாசிகள் .....
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
05-ஏப்-202010:46:48 IST Report Abuse
Tamilnesan அமெரிக்கா தன் முதுகில் உள்ள அழுக்கை பார்க்கட்டும்..பிறகு அடுத்தவனுக்கு புத்தி சொல்லலாம்...கொரானா விஷயத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இருவரின் கூட்டு சதி தான்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
05-ஏப்-202010:34:03 IST Report Abuse
Milirvan தேச விரோதிகள்/துரோகிகள், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எப்படி நயவஞ்சகமாக கட்டமைக்கிறார்களோ, அதேபோல இப்போது காலதேசவர்த்தமானங்கள் அருமையாக கனிந்து வந்திருப்பதை பிஜேபி அரசு சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. அபாண்ட பழி போட்டே பழக்கப்பட்ட துரோகிகளுக்கு அவர்கள் பாணியிலேயே எதிர்த்து இயங்கினால்தான் சுரீர்'ரென்று புரியும்.. சிங்களனையும், இஸ்ரேலையும் வழிகாட்டியாக கொள்ள வேண்டும்..
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஏப்-202014:07:53 IST Report Abuse
Malick Rajaஉன்போன்ற நல்லெண்ணம் கொண்டவர்களுக்கு கொரோனா பரிசாகட்டும் .. இன்னும் திருந்தாமல்இருப்பது விளங்கின அறிவுதான் காரணமாக இருக்கிறது .. உன்போன்றவர்கள் இந்தியாவில் 00.01% சதவீதம் இருப்பது நல்ல மரத்தில் பில்லுருவிகளை போலத்தான் . அதை கலைவதும் எளிதாக காலத்தின் கைகளில் வந்துவிட்டதும் உண்மை...
Rate this:
sivan - seyyur,இந்தியா
08-ஏப்-202001:57:26 IST Report Abuse
sivan இன்னமும் நீங்கள் உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளாது இருப்பதும்... சம்பந்தேமே இல்லாது மத்திய அரசை விமரிசிப்பதோடு .. எங்களுக்கு கோரோனோ பரிசாகட்டும் என்று பேசுவது ஆச்சரியமாக உள்ளது . தற்போது கோரோனோ யாருக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று பேச நான் இறங்கினால் ..அது நாகரீகமாக இராது. முதலில் உங்கள் ஊருக்கு போன் போட்டு.. தில்லி சென்ற அனைவரும் கோரோனோ டெஸ்ட் செய்து கொண்டார்களா என்பதையும்.. அவர்தம் உறவினர்களின் நோய் பாது காப்பு பற்றியும் உறுதி செய்து கொள்ளுங்கள் .. இதுதான் இப்போது முக்கியமானது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X