சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஐ.நா.,; சர்வதேச அளவில் 15 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்பட்சமாக இத்தாலியில் 17 ஆயிரத்து 669 பேர் பலியாகி உள்ளனர்.இன்று ( ஏப்.9ம் தேதி) காலை 11.15 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 ஆயிரத்து 518 பேர் பலியாகி உள்ளனர். 3லட்சத்து 30 ஆயிரத்து 697 பேர்

ஐ.நா.,; சர்வதேச அளவில் 15 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்பட்சமாக இத்தாலியில் 17 ஆயிரத்து 669 பேர் பலியாகி உள்ளனர்.
இன்று ( ஏப்.9ம் தேதி) காலை 11.15 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 ஆயிரத்து 518 பேர் பலியாகி உள்ளனர். 3லட்சத்து 30 ஆயிரத்து 697 பேர் மீண்டுள்ளனர்.

latest tamil news
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் நகரில் கொரோனா தொற்று பரவ துவங்கியது. இங்கு பீதி காரணமாக ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சீனாவில் 81 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 329 பேர் பலியாகி உள்ளனர்.


பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்


உலகிலேய அதிக கொரோனா தொற்று பாதிப்பு என்ற வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 797 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நியூயார்க்கில் அதிகப்பட்சமாக 4 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளளனர். இந்நாட்டில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


latest tamil news

அதிக மரணம் சந்தித்த இத்தாலி


உலகில் அதிகப்படியான மரணத்தை சந்தித்த நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 17 ஆயிரத்து 669 பேர் பலியாகி உள்ளனர். இது உலகிலேயே அதிக மரணம் ஆகும். அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 220 பேர். இதில் 14 ஆயிரத்து 792 பேர் இறந்துள்ளனர். பிரான்சில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10, 869 பேர் இறந்துள்ளனர். பிரிட்டனில் 60 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டனர். 7,097 பேர் பலியாகினர். 5,734 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 473 பேர் குணமாகியுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் 3, 139 பேர் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 13, 912 பேர் பாதிக்கப்பட்டு 231 பேர் இறந்துள்ளனர். இலங்கையில் 159 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் இறந்துள்ளனர்.


latest tamil news
ஈரானில் 62 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டு, 3,872 பேர் பலியாகினர். ஜெர்மனியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டு 1,854 பேர் பலியாகினர். பெல்ஜியத்தில் 22 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு 2,035 பேர் பலியாகி உள்ளனர். நெதர்லாந்தில் 19,580 பேர் பாதிக்கப்பட்டு 2,101 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் 4, 100 பேர் பாதிக்கப்பட்டு 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-ஏப்-202021:30:46 IST Report Abuse
Ramesh Sargam இன்று இந்தியாவிடம் இருந்து உதவி பெற்ற இலங்கை, நாளை சீனாவுக்கு ஜால்றா போடாமல் இருந்தால் அதுவே அவர்கள் இந்தியாவுக்கு செலுத்தும் நன்றி கடன்.
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
08-ஏப்-202021:28:37 IST Report Abuse
Sundararaman Iyer மீடியாக்க்காரர்கள் அமெரிக்காவின் பாதிப்பை மிகைப்படுத்தி காண்பிக்கிறார்கள். நாங்களும் அமெரிக்காவில் தான் இருக்கிறோம். நல்ல கட்டுப்பாட்டுடன் வெளியே போவதை அறவே தவிர்த்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடைக்கிறோம். இதுவும் கடந்து போகும். கருப்பசாமி காப்பாற்றுவார்.......................
Rate this:
Cancel
jayanantham - tamilnaadu ,இந்தியா
08-ஏப்-202010:59:16 IST Report Abuse
jayanantham டல்லாஸ் சத்திய நாராயணன் அவர்களுக்கு , கீழ்கண்ட தகவல்கள் கூகுளில் படித்ததிலிருந்து அமெரிக்கா வைப்பற்றி தரப்பெறுகிறது. நாடு முழுவதும், COVID-19 இன் 395,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் 50 மாநிலங்கள், வாஷிங்டன், டி.சி., மற்றும் மூன்று யு.எஸ். ஒன்பது மாநிலங்கள் 10,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளன நாட்டில் குறைந்தது 12,786 பேர் வைரஸால் இறந்துள்ளனர். COVID-19 உலகளவில் 82,00 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது. நியூயார்க்கில் இதுவரை அறிவிக்கப்பட்ட பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து நாம் அறிந்தவை கீழே. செவ்வாய்க்கிழமை காலையில், சுகாதார அதிகாரிகள் குறைந்தபட்சம் உறுதிப்படுத்தியுள்ளனர்: நியூயார்க் மாநிலத்தில் மொத்தம் 140,078 பாதிப்புகள் மாநிலத்தில் கொரோனா வைரஸால் 5,558 பேர் இறந்தனர் நியூயார்க் நகரில் 74,601 பாதிப்புகள், குறைந்தது 3,544 இறப்புகள் உட்பட தீவிர சிகிச்சையில் 4,604 பேர் நியூ ஜெர்சியில் 44,416 பாதிப்புகள், 1,232 பேர் உயிரிழந்துள்ளனர் கனெக்டிகட்டில் 7,781 பாதிப்புகள், 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X