சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா: 5 பேர் பலி

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (112)
Share
Advertisement
Tamil Nadu, Coronavirus, Death Toll, Covid-19, கொரோனா, வைரஸ், தமிழகம், விழுப்புரம், பலி, உயர்வு, Corona, Corona update, India fights corona, World fights corona, Corona deaths

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 90,541 பேர் உள்ளனர். 28 நாள் கண்காணிப்பு முடிந்து 5,315 சென்றுள்ளனர். 4,448 பேருக்கு நடந்த சோதனையில் 74 பேருக்கு கொரோனா உள்ளது உறுதியாகியுள்ளது. அதில் 73 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர். அவருக்கு வெளிநாட்டில் பயணம் செய்தவருடன் தொடர்பு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. 407 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 1,681 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 422 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மக்கள் அனைவரும், குறிப்பாக வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மாவட்ட வாரியாக


தமிழகத்தில் மொத்தம் 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 91 பேரும், திண்டுக்கலில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, திருநெல்வேலி-37, ஈரோடு-32, கோயம்புத்தூர்-29, நாமக்கல்-24, தேனி, ராணிப்பேட்டையில் தலா 23, கரூர்-22, செங்கல்பட்டு-19, மதுரை, திருச்சியில் தலா 17, திருவாரூர்-12, திருவள்ளூர், விருதுநகரில் தலா 11, திருப்பத்தூர், விழுப்புரத்தில் தலா 10, சேலம், தூத்துக்குடியில் தலா 9, திருவண்ணாமலை-6, நாகப்பட்டினம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா 5, வேலூர், காஞ்சிபுரம், கடலூர், திருப்பூரில் தலா 3, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா 2, தஞ்சாவூர், பெரம்பலூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5 பேர் பலி


இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மதுரையை சேர்ந்தவர், கொரோனாவுக்கு உயிரிழந்தார்


latest tamil newsவிழுப்பும் மாவட்டம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 51 வயது நபர், கொரோனா தொற்றால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ள இவர், சமீபத்தில் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் இருக்கும்பொழுது, நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் அதிகமாகி நேற்று(ஏப்.,4) காலை 7.44 மணியளவில் உயிரிழந்தார்.

அதேபோல், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது 53 வயதான மனைவிக்கும் தொற்று ஏற்பட்டு, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று(ஏப்.,4) அவருக்கு அதிகளவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிற்பகல் 2.25 மணியளவில் உயிரிழந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது தற்போது கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று(ஏப்.,5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.கோவை பெண் பலி


கோவை 'கொரோனா' மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் பலியாகி உள்ளார்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நிலைமை மோசமான பிறகுதான் அவர் இங்கு அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறல் இருந்ததால், ஐ.சி.யு.,வில் அனுமதித்து, வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.


ஆனால், பரிசோதனை முடிவுகள், வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். மேலும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்பெண்ணுக்கு, இருதய நோய் மற்றும் நுரையீரல் பழுதாகி இருந்தது. எனவே, அதன் காரணமாகவும் இறந்திருக்கலாம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தில்  நாதன்   தென்காசி நம் பாரத பிரதமர் மோடிஜி எடுத்த முடிவு சரியா தவறா என்பது வேறு விஷயம் அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி உலகத்தில் எல்லா நாடுகளுடன் COMPARE பண்ணும் போது கோரோனோ பாதிப்பு மிகவும் குறைவு அதுவும் மக்கள் தொகை அதிகம் உள்ள நம் இந்தியாவில் கோரோனோ பாதிப்பு மிக குறைவு இதற்கு நம் பிரதமர் மோடிஜியும் நம் தமிழ்நாடு CMம் எடுத்த நடவடிக்கை தான் விளக்கு ஏற்றுவது மூட நம்பிக்கை என்றால் எல்லாமே மூடநம்பிக்கை தான் மஞ்சள் துண்டு போடுவது ஆண்டவரிடம் பிராத்தனை செய்வது கல்லறை தோட்டம் சென்று மெழுகு வர்த்தி ஏற்றுவது எல்லாமே மூட நம்பிக்கை இல்லையா மோடிஜியின் கட்டளைக்கு ஆதரவு கொடுப்போம், இன்று இரவு 9 மணிக்கு விளக்கு அல்லது டார்ச் லைட் ஆல் நம் வீட்டை ஒளிர செய்வோம் நேர்மறை அலைகளை POSITIVE WAVES நம் வீட்டில் வரவேற்போம் பாரத் மாத கீ ஜெய்
Rate this:
Cancel
05-ஏப்-202017:26:30 IST Report Abuse
ஆரூர் ரங் இறப்புக்களில் கேட்காமலேயே 100 இட ஒதுக்கீடு. ஏன் இறைவா?
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
05-ஏப்-202016:55:19 IST Report Abuse
kumzi தமிழகத்தை கொரொனாநாடாக மாற்றிய மூர்க்கர்களின் கைக்கூலி சுடலை கானை வாழ்த்துவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X