பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு கொரோனா இல்லா குழந்தை பிறந்தது

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் கொரோனா பாதித்த எய்ம்ஸ் டாக்டரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், உளவியல் துறையில் டாக்டராக பணிபுரிந்தவருக்கு , கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்பிணியான அவரது
AIIMS, doctor, COVID 19, wife, deliver, infection, healthy baby, coronavirus, corona, டில்லிஎய்ம்ஸ், எய்ம்ஸ், கொரோனா, கர்ப்பிணி, குழந்தை

புதுடில்லி: டில்லியில் கொரோனா பாதித்த எய்ம்ஸ் டாக்டரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், உளவியல் துறையில் டாக்டராக பணிபுரிந்தவருக்கு , கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்பிணியான அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவரும் தனிமைபடுத்தப்பட்டதுடன், அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று(ஏப்.,3) இரவு அவருக்கு சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில், கொரோனா பாதித்த தம்பதிக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறப்பது இதுவே முதல்முறையாகும்.


latest tamil news




இது தாடர்பாக எய்ம்ஸின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறுகையில், சிசேரியன் முறையில் டாக்டரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது, டாக்டர்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றினர். டாக்டர்கள், கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளும் உடைகளை அணிந்திருந்தனர். டாக்டரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்ததும், அவரை நாங்கள் தனிமைபடுத்திவிட்டோம். பிரசவத்திற்காக, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி தற்காலிக அறுவை சிகிச்சை அறை தயார் செய்யப்பட்டது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-ஏப்-202013:30:40 IST Report Abuse
Rafi இக்கட்டான சூழ்நிலையில் சிசேரியன் செய்த அந்த மருத்துவ குழுவிற்கு நன்றி தெரிவிப்போம்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-ஏப்-202016:54:42 IST Report Abuse
J.Isaac இறைவனுக்கு நன்றி. தாய் சுகமடைய இறைவனிடம் வேண்டுவோம்
Rate this:
Cancel
vidhuran - chennai,இந்தியா
04-ஏப்-202016:32:46 IST Report Abuse
vidhuran கடவுள் அனுகிரஹத்தில் அந்த குழந்தையும் தாயும் நீண்ட ஆரோக்கியத்தை பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன். தந்தை ஒரு ஈடில்லா மருத்துவ பணியை இந்த இக்கட்டான நேரத்தில் செய்துவருவதற்கு கட்வுளின் ஆசீர்வாதங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X