கொரோனா தாக்கம்; அமெரிக்காவில் தற்போதைய நிலவரம் என்ன?

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
நியூயார்க் : அமெரிக்க கடற்படை கப்பல் நியூ யார்க் வந்தடைந்தது. கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து உபகரணங்களும், படுக்கை வசதிகளும் இதில் உள்ளன. நியூ யார்க் நகரில் 1200 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.நியூயார்க் மக்களுக்கு கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட உதவ நியூ யார்க் கவர்னர் ஆன்ட்ரூ க்யூமோ அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கு வேண்டுகோள்
New York, Governor, US, Trump, coronavirus, corona, corona death toll, covid-19, corona cases,  President, கொரோனா, கொரோனாவைரஸ், நியூயார்க், அமெரிக்கா, டிரம்ப்

நியூயார்க் : அமெரிக்க கடற்படை கப்பல் நியூ யார்க் வந்தடைந்தது. கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து உபகரணங்களும், படுக்கை வசதிகளும் இதில் உள்ளன. நியூ யார்க் நகரில் 1200 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க் மக்களுக்கு கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட உதவ நியூ யார்க் கவர்னர் ஆன்ட்ரூ க்யூமோ அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதீத இழப்பு, அதீத வலி, அதீத கண்ணீர், அதீத மன உளைச்சல் ஆகியவற்றை மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர் என கவர்னர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்பை வெளுத்து வாங்கினார் நியூயார்க் கவர்னர்.


latest tamil news
'அமெரிக்க விஞ்ஞானிகளும் அரசு அதிகாரிகளும் ஒன்றிணைந்து அதிபர் டிரம்ப் முன்னிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும். தற்போதைய நிலவரம் அசாதாரணமானது. அரசியல், ஊடகம் குறித்து உங்களிடம் சாவகாசமாக பேச நாங்கள் வரவில்லை. அமெரிக்காவை கொரோனா என்னும் சுனாமி சீரழித்துக்கொண்டிருக்கிறது.

டாக்டர் ஆந்தோனி பவுஸி என்கிற நியூ யார்க் நோய்த்தொற்று நிபுணர் கூறுகையில் புளோரிடா, மிச்சிகன் லுயூசியான உள்ளிட்ட இதுவரை கொரோனா பரவாத இடங்களில் கூட தற்போது புதிதாகப் பரவத் துவங்கி உள்ளது என்றுள்ளார். ஐசியூவின் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இருமடங்காகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-ஏப்-202001:24:37 IST Report Abuse
 nicolethomson சமூக இடைவெளி மிக முக்கியம் என்று எங்க பிரதமர் கடத்தியது எங்க நல்லதுக்குன்னு புரிஞ்சது
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
04-ஏப்-202017:32:27 IST Report Abuse
Somiah M அமெரிக்க அரசு மற்றும் அதிபர் மீது குறை கூறுவதில் நியாயம் உள்ளது .
Rate this:
Cancel
Nandha -  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-202017:08:13 IST Report Abuse
Nandha Namma situation a olunga sollunga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X