பொது செய்தி

இந்தியா

தெருவிளக்குகளை அணைக்க வேண்டாம்: மத்திய அரசு அறிவுரை

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
பிரதமர்மோடி, மின்விளக்குகள், மத்தியஅரசு, Coronavirus, Covid-19, Corona, Central government, PM Modi's appeal

புதுடில்லி: பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, மக்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்தால் போதும். மற்ற மின்சாதனங்களை அணைக்க தேவையில்லை. உள்ளாட்சி அமைப்புகள் மின்சார விளக்குகளை அணைக்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று வீடியோ மூலம் பிரதமர் மோடி பேசும் போது, கொரோனா வைரசை தோற்கடிக்கும் விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டிய நேரம் இது. ''வரும், 5ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்கு களை ஒளிரவிட்டு, நம் வலிமையை காட்ட வேண்டும் எனக்கூறினார்.

இந்நிலையில், மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றில், நாளை (ஏப்ரல் 5) பிரதமர் வேண்டுகோளின்படி, நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் பொது மக்கள் நலன் கருதி, உள்ளாட்சி அமைப்புகள், தெருவிளக்குகளை அணைக்கக்கூடாது. மின்சாதனங்களை அணைக்க தேவையில்லை. மின் விளக்குகளை அணைத்தால் மட்டும் போதும். பிரிட்ஜ், மின்விசிறி, டிவி, கம்ப்யூட்டர், ஏ.சி., போன்ற மின் சாதனங்களை அணைக்கதேவையில்லை. மருத்துவமனை உள்ளிட்ட அத்யாவசியமான இடங்களில் விளக்குகளை அணைக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.


அறிவுரை


latest tamil news


முன்னதாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மெழுகுவர்த்தி , அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு முன்னர் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை பயன்படுத்தக்கூடாது. கைகளை சோப்பு மட்டும் போட்டு கழுவி விளக்கேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.


தமிழக மின்சார வாரியம் நடவடிக்கை


தமிழகத்தில் மின்கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின்விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, மற்ற மின்சாதனங்களை வழக்கம் போல் இயக்கத்தில் வைத்து கொள்ளுங்கள். மக்கள் இது குறித்து அச்சபட தேவையில்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-202021:08:16 IST Report Abuse
கதை சொல்லி உபிஸ் வேலையை பற்றி ஈபிஎஸ் எடுத்து சொல்லீருப்பாரு...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-ஏப்-202018:56:10 IST Report Abuse
J.Isaac கை கழுவது போல் மனதை கழுவுங்கள்.
Rate this:
Cancel
04-ஏப்-202018:53:58 IST Report Abuse
ஆப்பு அடப்பாவமே... தெரு விளக்குகளை அணைக்கலேன்னா கொரொனா பேபிக்கு கண் தெரியுமே... எங்கே ஓடிப்.போகும்?போய் தெருவெளக்கு மேல உக்காந்துட்டு அப்புறம் எறங்கி வருமே...
Rate this:
04-ஏப்-202020:15:28 IST Report Abuse
நக்கல்இந்தியா விஷயத்துல அந்நியர்கள் தலையிடாதீர்கள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X