சோகத்தில் பிரிட்டன் ராணி

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

லண்டன்: தாயார் நினைவு தினம் நெருங்கிய நிலையில், மகனுக்கு கொரோனா பாதிப்பு, அரச குடும்பத்தில் இருந்து பேரன் பிரிவு என அடுத்தடுத்த நிகழ்வுகளால் பிரிட்டன் ராணி எலிசபெத் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.



latest tamil news



பிரிட்டனில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நாளை இரவு 8 மணிக்கு பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஆனால் கடந்த சில நாட்கள், அவருக்கு சோகமான நாளாக அமைந்துள்ளது.


latest tamil news


மார்ச் 30 அன்று, தனது தாயார் நினைவு நாள் நெருங்கிய நிலையில், சோகத்தில் இருந்த எலிசபெத்திற்கு, மன வருத்தத்தை அதிகரிக்கும் வகையில், அவரது மகன் சார்லஸ், கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதனால், அரச பணிகளை புறக்கணித்துவிட்டு, தனிமைபடுத்தி கொண்டார். அரசு குடும்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெயர் சார்லசுக்கு கிடைத்தது. டாக்டர்கள் தொடர் சிகிச்சை காரணமாக அவர் குணமடைந்தார்.
சார்லசின் மனைவி கமிலாவிடம்(76) நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர், தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டார். சார்லஸ், சமீபத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோரை சந்தித்து வந்தார். அப்போது, தன்னை சந்தித்தவர்களிடம் வணக்கம் தெரிவித்த சார்லசுக்கு எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



எலிசபெத்திற்கு மற்றொரு கவலையாக, பேரன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்கலும் அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகுவது அமைந்தது. அவர்களுக்கு எப்படி விடைகொடுப்பது என்பதில் கவலையில் இருந்தார். அரச குடும்பத்தின் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்னர், ஹாரி தம்பதி சமூக வலைதளபக்கத்தில், இத்தனை நாள் தெரிவித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். அரச குடும்பத்தில் விலகிய ஹாரி தம்பதியினர், தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகின்றனர்.


latest tamil news


ஆண்டுதோறும், பிரிட்டன் ராணி எலிசபெத் பிறந்த நாள் அன்று பாரம்பரிய முறைப்படி நடக்கும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டதும், அவருக்கு வருத்தத்தை உண்டாக்கியது. அரசியின் பிறந்த நாள் ஏப்.,21. ஆனால், ஜூன் 13ல் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அரசின் அறிவுரைப்படி இந்த அணிவகுப்பு ரத்த செய்யப்பட்டது.


latest tamil news


எலிசபெத்தின் தாயார், 2002 மார்ச் 30 அன்று உயிரிழந்தார். இதனால், அவர், மார்ச் மாதம் இறுதியில் சோகத்தில் தான் இருப்பார். எலிசபெத்தின் தந்தை, அரசர் 6ம் ஜார்ஜ் காலமாகி 50 ஆண்டுகள் பின்னர் தாயார் 101 வயதில் காலமானார். அவர், தூங்கி கொண்டிருந்த தூக்கத்தில் உயிர் பிரிந்ததாக அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SRINIVASALU - chennai,இந்தியா
08-ஏப்-202017:53:11 IST Report Abuse
P. SRINIVASALU ஆங்கிலேயர்கள் வெற்றிக்கு நம்மில் பலர் தான் காரணம். இல்லையென்றால் அவர்கள் அப்போதே ஓடியிருப்பார்கள்.
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
06-ஏப்-202005:00:01 IST Report Abuse
Rajesh பூமிக்கு பாரம்........
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
06-ஏப்-202004:53:15 IST Report Abuse
Rajesh உங்கள் வம்சம் செய்த அட்டூழத்தியத்திற்கு காலம் கர்மா என்ற வடிவில் தன் பணியை செய்கிறது, அதை அனுபவிக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X