ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கான்பெரா : ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசின் தொற்று விகிதத்தில் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின்றன.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறித்து தடுப்பு நடவடிக்கையில் பல நாடுகளின் தலைவர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தாக்கத்தால் பல உயிர்கள் பாதிக்கப்பட்டு பலியான சம்பவமும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நோய் தொற்றின் விகிதம் பாதியாக குறைந்து வருகிறது.

இது தொடர்பாக நேற்று (ஏப்.,3) அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று சரியாக குறைந்து வருகிறது. இதை ஆரம்பகால வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆஸ்திரேலியர்கள் ஈஸ்டர் பண்டிகையின் போது வெளியே வராமல் வீட்டிலேயே கொண்டாடுங்கள். தேசிய அமைச்சரவைால் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மற்றும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆஸ்திரேலியர்களின் முயற்சியும் தான் நோய் தொற்று குறைவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று. இது தொடர்பாக கொரோனா எதிர்ப் நடவடிக்கையை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.


latest tamil newsதினமும் பல மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோல் கொரோனா விஷயத்திலும் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே இதை வெற்றியாக கருத முடியாது. கொரோனா தொற்று 12 நாட்களுக்கு முன் இருந்த விகிதத்தில் தற்போது இருந்தால் நாட்டில் 10,500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கும். ஈஸ்டர் நேரங்களில் மக்கள் பயணங்களை தவிருங்கள். ஆஸ்திரேலியர்களின் தியாகத்தை பார்க்க விரும்பினால், மற்ற நாடுகளை பாருங்கள். அங்கு கொரோனா நடவடிக்கை முறை மற்றும் செயல்பாடுகமை பார்த்தால் புரியும். இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹன்ட் கூறுகையில், இரு வாரங்களுக்கு முன் 25 முதல் 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இது இன்னும் ரம்பகால கட்டத்தில் தான் உள்ளது. ஆஸ்திரேலியர்கள் தங்களுக்கு முன்னால் உள்ள மாரத்தானை (கொரோனா எதிர்ப்பு) எதிர்கொண்டு போராடி வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் 27 இறப்புகள் மற்றும் சுமார் 5319 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வரையறுக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு, உலகின் விரிவான சோதனை முறை, சமூக நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க உதவுகின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்க முழு ஒத்துழைப்பும், ஆஸ்திரேலியர்களின் தியாகம், கடின உழைப்பு போன்றவை தான் எங்களுக்கு ஆரம்பகால நம்பிக்கையை உருவாக்கின. இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
05-ஏப்-202005:46:23 IST Report Abuse
ocean kadappa india இது வரை கொரோனா எற்ற பெயரில் வைரஸ் கிருமிகள் உலகை தாக்கியதில்லை. இப்போது மட்டும் அது எப்படி புதியதாக முளைத்தது. இந்த நோய் எப்போதும் உலக அழிவு வரை மனிதர்களை பிரித்தே வைத்திருக்கும். ஒன்றாக கூடினால் ஆபத்து வரும். எனவே மனித குலத்தினர் அனைவரும் எந்த சூழலிலும் தனி மனித சமுக விலகலை சாதாரணமாக கடைப்பிட்டிப்பது அவசியம். உறைவிடங்களிலும் இது நடை முறைக்கு வரவேண்டும்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
04-ஏப்-202020:40:24 IST Report Abuse
raghavan Winter starts from June, must be very careful.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X