ஸ்பெயினில் ஊரடங்கை ஏப்.,26 வரை நீட்டிக்க முடிவு

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

.மேட்ரிட்: ஸ்பெயினில் நடைமுறையில் உள்ள ஊரங்கு உத்தரவை வரும் 26ம் தேதி வரை நீட்டிக்க அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸ் முடிவு செய்துள்ளார். இந்நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்க 7ம் தேதி அந்நாட்டு அமைச்சரவை கூடுகிறது.



latest tamil news



உயிர் கொல்லி வைரசான கொரோனா, ஐரோப்பாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஸ்பெயினில் 1.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,744 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு கடந்த மார்ச் 14ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. மார்ச் 29 வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஏப்.,11 வரை ஊரடங்கை நீடித்தது.

இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க முடிவு செய்த பிரதமர், எதிர்கட்சிகள் மற்றும் கொரோனா பரவலை ஆராய்ந்து வரும் அறிவியல் நிபுணர்களுடன் ஆலோசித்தார். ஆலோசனைக்குப்பின், ஏப்.,26ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க சான்சஸ் முடிவு செய்துள்ளார்.


latest tamil news



ஸ்பெயினின் கீழ் சபையான காங்., பிரதிநிதிகளின் ஒப்பதல் பெற்ற பின்பே ஊரடங்கை நீட்டிக்க முடியும் என்பதால், இதுகுறித்து முடிவெடுக்க அந்நாட்டு அமைச்சரவை வரும் 7ம் தேதி(செவ்வாய்) கூட உள்ளது. 9ம் தேதி ஓட்டெடுப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-ஏப்-202020:33:38 IST Report Abuse
A.George Alphonse இவர்கள் திருந்தவே மாட்டார்கள் போலும்.கரோனா வைரஸால் மக்கள் கொத்து கொத்தாய் இந்த நாட்டில் சாகும்போதும் கூட இந்த கை கொடுக்கும் வழக்கம் மாறாதவரை இவர்கள் இந்த வருடம் இறுதிவரை ஊரடங்கை நீடித்தாலும் ஒருபயனும் இல்லை.
Rate this:
Cancel
rajarajan - madurai,இந்தியா
04-ஏப்-202020:13:40 IST Report Abuse
rajarajan நம் நாட்டிலும் தினமும் எண்ணிக்கையினை பார்த்தால் நாமும் அதையே செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் ஸ்பெயினை விட இங்கே மக்கள் அடர்த்தி மிக அதிகம். நான்கே நாட்களில் வேகமாக பரவி விடும். ஊரடங்கை நீடிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X