கொரோனா தடுப்பு: 8-ம் தேதி எதி்ர்க்கட்சியினருடன் மோடி உரை

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Covid-19, coronavirus, PM Modi video conferencing, fight against corona, video conferencing, கொரோனா, தடுப்பு, நடவடிக்கை,எதிர்க்கட்சி_தலைவர்கள், மோடி, வீடியோ_கான்பரன்சிங், உரை

புதுடில்லி: கொரோனா தடுப்பு குறித்து ஏப்.,8 ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.


latest tamil news



இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 8-ம் தேதி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாடுகிறார். இது குறித்து பார்லி. விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பார்லிமென்ட்டின் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் 5-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி வரும் ஏப்.8-ம் தேதி காலை 11 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட உள்ளார். இதனை இந்தியா டுடே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன் மூலம் முதன்முதலாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
05-ஏப்-202011:41:42 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு தமிழ்நாட்டில் கொரோனா நிலைமை குறித்து சுடலைக்கு போன் போட்டு கேட்டாராம் மணிமேகலை. அந்த மணிமேகலையிடம் ஆலோசனை நடத்தப் போறாரா மோடி. மோடி கொஞ்சம் விசயமுள்ள ஆளுன்னு நினைச்சு தப்பு பண்ணிட்டேன்
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
05-ஏப்-202011:40:04 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு மோடி தேவையில்லாத வேலையைச் செய்கிறார் நாடு நாசமாகனும் மோடிக்கு கெட்ட பெயர் கிடைக்கணும்ன்னு நினைக்கிறவங்க கிட்டேயே ஆலோசனை கேக்குறாரு வேஸ்ட்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஏப்-202004:46:05 IST Report Abuse
J.V. Iyer எதிர் கட்சிகள் சொல்வதை கேளுங்கள். ஆனால் ஒன்றை கூட செயல் படுத்த வேண்டாம். அவைகள் எல்லாம் இந்தியா இறையாண்மைக்கு எதிரானது. பாகிஸ்தானுக்கு பயனுள்ள கருத்துக்களாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X