கொரோனாவால் நஷ்டம்: டிரம்ப் ஹோட்டல் ஊழியர்கள் 1,500 பேர் பணிநீக்கம்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனாவின் தாக்கத்தால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டல்களில் 1,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்



latest tamil news



அமெரிக்காவை நிலை குலைய செய்துள்ள கொரோனாவால் அங்கு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்குவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அதிபர் டிரம்பிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் டிரம்பிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, லாஸ்வேகாஸ் போன்ற இடங்களில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள் 1,500 பேர் கொரோனாவால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news



அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் ஹோட்டல்கள் வழக்கமாக இயங்குவதில் சிரமம் உள்ளது. ஊரடங்கின் காரணமாக வாடிக்கையாளர்கள் வருகையும், ஆர்டரும் வெகுவாக குறைந்து விட்டது.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், 'அமெரிக்காவி்ல் உள்ள மற்ற ஹோட்டல்களைப் போலவே எங்களது வணிகங்களும் ஹோட்டல்களும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அதனால் ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக நான் வருந்துகிறேன் என்றார்

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஏப்-202021:19:15 IST Report Abuse
Bhaskaran அமெரிக்காவின் பெரிய சூதாட்ட நகரத்திலும் டிரம்ப் ஹோட்டல்கள் வைத்துள்ளார்
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
05-ஏப்-202019:22:49 IST Report Abuse
Ray நாலுநாள் நஷ்ட்டமானால் தூக்கிடுவாங்களா? இவ்வளவுநாள் பணமா கொட்டினப்போ பிரிச்சி கொடுத்திட்டங்களோ மேலே ஒருத்தன் இருந்துதான் ஏழைகளுக்கு படியளந்து கொண்டிருக்கிறான் வேறு யாருமல்ல
Rate this:
Cancel
Dynamo - Den Haag,நெதர்லாந்து
04-ஏப்-202021:56:30 IST Report Abuse
Dynamo ஊருக்கு தான் உபதேசம்..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
06-ஏப்-202006:05:30 IST Report Abuse
 Muruga Velரொம்ப நாளா ஆள காணோமே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X