பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை பெட்ரோல் விற்பனை

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஒரு மணிக்கு மேல் பெட்ரோல் நிரப்பப்படாது என பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்தியஅரசு 21 நாள் நாடு முழுவதிற்குமான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தொடர்ந்து தமிழக அரசும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான நேரத்தை காலை முதல் மதியம் 2.30 மணிவரை என தமிழக அரசு நிர்ணயம் செய்திருந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியது.

ஆனால் மக்கள் எதையும் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல் கூட்டமாக வெளியே வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நேரத்தை மதியம் 2.30 மணிக்கு பதிலாக ஒரு மணி வரை மட்டுமே என்று அறிவித்தது.


latest tamil news



இதனையடுத்து பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை (5 ம் தேதி) முதல் பெட்ரோல் விற்பனை மதியம் ஒரு மணி வரை மட்டுமே. அதற்கு பின்னர் விற்பனை கிடையாது என தெரிவித்துள்ளது.

முன்னதாக தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல் விற்பனை குறித்து தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது.மேலும் அரசு வாகனங்கள் மற்றும் எமர்ஜென்சி வாகனங்களுக்கு கட்டுப்பாடு பொருந்தாது என கூறிஇருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஏப்-202004:16:38 IST Report Abuse
J.V. Iyer எவ்வளவு பேர்கள் பெட்ரோல் வாங்கப்போகிறார்கள்? இந்த செய்தி தேவைதானா? மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உதவுமாறு செய்திகளை வெளியிடுங்கள். தினமலர் மக்கள் செய்தித்தாள். எனவே தேவையானத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.
Rate this:
Cancel
வலதுசாரி மனிதன் அரசு எதை மூடினாலும் ஏக இறைவன் நாடினால் மட்டுமே கட்டுபடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X