பொது செய்தி

இந்தியா

21 நாள் ஊரடங்குக்குப்பின்.. இந்தியாவின் திட்டம் என்ன?

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
Corona update, covid-19 in India, India fights corona, coronavirus crisis, coronavirus update, 21-days lockdown, quarantine, curfew, india, PM Modi, coronavirus, covid19, fight against corona

புதுடில்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்.,14ம் தேதியுடன் முடிகிறது. ஊரடங்கின் பாதி நிலையை இந்தியா எட்டியுள்ள நிலையில் ஊரடங்குக்குப்பின் எடுக்க வேண்டிய நடைமுறைகளை அரசு விவாதிக்க தொடங்கி உள்ளது.


தீபாவளி வரை சமூக விலகல்:


அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி சமீபத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது, ஊரடங்கு காலம் முடிந்தபின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என முதல்வர்களிடம் பிரதமர் தெரிவித்தார். ஊரடங்குக்குப்பின் சமூக விலகல் நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா பாதிப்பு குறித்து, மாவட்ட அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், வைரஸ் அதிகம் பரவும் இடங்களை கண்டறிவதும் அவசியம் என அவர் கூறினார்.


latest tamil newsஊரடங்கு காலம் முடிந்த, அடுத்த இரண்டு வாரங்களுக்கு, வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை மேற்கொள்வது, அவர்களை கண்டறிவது, தனிமைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை தொடர வேண்டும் என கூறிய பிரதமர், வங்கிகளில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பயனாளிகளுக்கு நிதியை பகிர்ந்தளிக்கும் நடைமுறையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசித்தார்.

மேலும், முதல்வர்களிடம், 'சமூக விலகலை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதையும், சாலைகளில் சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும்; சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிவிதை கட்டுப்படுத்த வேண்டும்' எனவும் தெரிவித்தார். மேலும், குறைந்தபட்சம் தீபாவளி (நவ., மாதம்) வரை சமூக விலகலை நாடு கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு:


வைரஸ் அதிகம் பாதித்துள்ள, பரவி வரும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊரடங்கை பிறப்பிக்கும் திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது. ஏப்.,14க்குள் வைரஸ் பரவல் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழியாக இருக்கும்.


மண்டலம் வாரியாக ரயில்கள் இயக்கம்:


ரயில்கள் இயக்கம் குறித்து திட்டமிட்டு வரும் ரயில்வே, மண்டல வாரியாக ரயில்களை இயக்க திட்டம் தீட்டி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ரயில்வே, அதற்கான திட்டத்தை தயார் செய்து ஒப்படைக்கும்படி ரயில்வே மண்டலங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வழக்கமான சேவைகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 22 முதல் நாடு முழுவதும் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news

விமான சேவை முன்பதிவுக்கு அனுமதி:


விமான சேவை குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம், 'ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாவிட்டால், ஏப்.,14க்கு பின் உள்நாட்டு விமான பயணங்களுக்கான முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் ஏற்கலாம் எனத் தெரிவித்தார். மேலும் வரும் 15ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படும். இருப்பினும், எந்தெந்த நாடுகளிலிருந்து விமானம் வரும் என்பது, சூழலுக்கு ஏற்றபடி அனுமதி வழங்கப்படும். வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள், ஊரடங்கு காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


latest tamil news
இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனம், அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களுக்கான முன்பதிவை ஏப்.,30 வரை நிறுத்தி வைத்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
08-ஏப்-202006:31:19 IST Report Abuse
ocean kadappa india சீன எதிரியால் மனித உடலுக்குள் ஊடுறுவும் விதமான விதமான வைரஸ்களை எப்படி அழிப்பது என்பதை முதலில் போர்க்கால அடிப்படையில் ஆராய்ந்து தக்க முன்னேற்பாடுகளை செய்வது மிக அவசியம். அதை விட்டு மேலும் ஊரடங்கை தொடர்வது மக்களை துன்புறுத்துவதுடன் அவர்கள் வாழ்வாதாரமும் சீரழியும்.
Rate this:
Cancel
msnarayanan - chennai,இந்தியா
07-ஏப்-202017:42:29 IST Report Abuse
msnarayanan ஸ்ரீ மோடிஜி எடுத்த லாக் டவுன் சரியான முடிவு என்று மிக பெரும்பாலான மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். வழக்கப்படி ராகுல் போன்றவர்கள் குறைகூறினாலும் மக்களின் உயிர் காக்கப்படவேண்டும் என்பதை அரசின் நோக்கம். அரசு மிக சரியாக முடிவு எடுத்திருக்கிறது. ஆனால் என்னைப்போன்ற பலர் டூரிஸ்ட் விசாவில் பல வெளிநாடுகளில் சில மாதங்கள் முன்பு வந்து தங்கி இறுக்கிரோம். "சொர்கமே என்றாலும் நம்வூரை போலாகுமா" . நாங்கள் விரைவில் தாயகம் திரும்ப ஏங்கிக்கொண்டிருக்கிரோம். சொந்தங்கள் வீடுவாசல் விட்டுவிட்டு வந்ததால் வுடனடியாக தாயகம் திரும்பவதற்கு விமான சேவை ஏற்பாடு செய்தால் எங்கள் ஏக்கம் தணியும். நான் தற்போது வந்திருக்கும் பிரிட்டன் நாட்டை விட நமது தாயகம் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிரோம். குறிப்பாக கரோனா தாக்குதல் பாதுகாப்பு நமது நாட்டில் எங்களுக்கு சரியானதாக இருக்கும் என்று உறுதியாக நினைகிரோம். அரசு ஆவண செய்யவேண்டுகிரோம்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
07-ஏப்-202006:29:15 IST Report Abuse
Sanny 21 நாட்களுக்கு பின் வியாதிகள் குறைந்துள்ளதா? குறையவில்லையா? என்ற நிலையை பார்த்துதான் முடிவுகள் எடுக்கப்படணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X