பொது செய்தி

இந்தியா

மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு வைக்க பிரதமர் மோடி உத்தரவு

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
PM,Modi,Coronavirus,Covid19,பிரதமர்,மோடி,கொரோனா,வைரஸ்

புதுடில்லி: 'மருத்துவ உபகரணங்களை போதிய அளவில் கையிருப்பு வைக்க வேண்டும்' என, சுகாதாரத் துறையினருக்கு, பிரதமர், மோடி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதற்கான கொள்கைகளை வகுப்பது, தீர்வுகளை அறிவிப்பது ஆகியவற்றுக்காக, 11 குழுக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த குழுவினருடன், பிரதமர், மோடி, இன்று(ஏப்.,4) ஆலோசனை நடத்தினார்.


latest tamil newsஇதையடுத்து, பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால், செயற்கை சுவாசத்துக்கு பயன்படும், 'வென்டிலேட்டர்' உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் தேவைப்படும். எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள், அத்தியா வசிய மருத்துவ உபகரணங்களை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகள், தனிமை முகாம்கள், பரிசோதனை கூடங்கள் ஆகியவற்றை அதிக அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக கவசம், கையுறைகள் ஆகியவற்றின் தயாரிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஏப்-202008:31:10 IST Report Abuse
Lion Drsekar கேரளாவில் ஒரு நாளைக்கு ஒரு மருத்துவருக்கு அவர்கள் அணியும் உடை மற்றும் கவசத்துக்கு ஆகும் செலவு ருபாய் 600 என்றும் நோயாளிகளுக்கு ருபாய் 50000 ம் என்றும் நேற்றைய செய்தி? ஒரு முறை பயன்படுத்தியதை அவர்கள் மறுநாள் அழித்து விடுகிறார்களாம் ?? அப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே? அறுவை சிகிச்சைக்கு முன்பெல்லாம் அணியும் பச்சை அல்லது நீல கலர் துணிகளை அணியலாம், அந்த துணியை மீண்டும் சலவைக்கு போட்டு பயன்படுத்தலாம், இப்படி செய்தால் பல லட்சம் கோடி ஒரு மாதத்துக்கு மிச்சமாகும்? சற்று சிந்தித்தால் பயன் பெறலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
05-ஏப்-202008:00:44 IST Report Abuse
VENKATASUBRAMANIAN As a leader he can plan and instruct to officials and ministers. But most of the burocrates are not doing their duty. Either don't know or lethargic resultin problem arises they unable face. Example delhi migrants. Modi cannot do in micro level. This is the major problem now. Request all burocrates, please co operate . Forget politics. It is not for all burocrates, only those who are favoring politically. Nation is first.
Rate this:
Cancel
Gopi Nath -  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-202001:37:58 IST Report Abuse
Gopi Nath this was too late
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X