சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பக்க வாத்தியம்

'வதந்தி பரப்ப குழு'விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர், சண்முகம், சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கொரோனா தொற்று உள்ளோருக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கு, மருத்துவமனையில் உணவு சரியாக வழங்கப்படவில்லை என, வதந்தி பரவியுள்ளது. இவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதோடு, சிறந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.மேலும், தினமும், என்னென்ன உணவுகள், சூப், பழங்கள் வழங்கப்படுகின்றன என்ற பட்டியலை வாசித்தார்.அனைத்தையும் குறித்துக் கொண்ட நிருபர் ஒருவர், 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது...

'வாட்ஸ் ஆப்'பில், வதந்தி பரப்புவதற்காகவே, சில அமைப்புகள், ஆளுங்களை நியமிச்சிருக்காங்க... அவங்களை புடிச்சு, 'உள்ளே' தள்ளினா தான், வதந்தியை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.அருகிலிருந்தோர், அதை ஆமோதித்தனர்.அது முடியும்; இது முடியாதா?

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், பறக்கும் கருவி மூலம், கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் நடமாடும் காய்கறி வாகனங்களை, மின்சாரத்துறை அமைச்சர், தங்கமணி சமீபத்தில் துவக்கி வைத்தார் நிருபர்களிடம், அவர் கூறுகையில், 'நடமாடும் காய்கறி வண்டிகள், தினமும், வீதிகள் தோறும் சென்று, அந்தந்தப் பகுதி மக்களுக்கு, காய்கறிகளை வழங்க உள்ளது.

150 ரூபாய்க்கு காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்' என்றார்.முக கவசம் அணிந்திருந்த நிருபர் ஒருவர், 'வீடு வீடாக, தினமும் போய், காய்கறி சப்ளை பண்ணும்போது, ரேஷன் கார்டுக்கு, 1,000 ரூபாயை கொடுக்க முடியாதா... அதுவும், ஒரே ஒரு முறை தானே, போகணும்...' என்றார்.அருகிலிருந்த சக நிருபர், 'அட ஆமாம்ல...' என்றபடியே, தலையாட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஏப்-202006:16:58 IST Report Abuse
D.Ambujavalli அப்படி ஆயிரத்தைக் கொடுத்து விட்டால் அமைச்சருக்கு விளம்பரம் கிடைக்காதே மண வீட்டில் மணமகனாகவும், மரண வீட்டில் பிணமாகவும் தனக்கே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்னும் அரசியல்வியாதிகளாயிற்றே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X