கொரோனா பரவல் எதிரொலி; உத்தவ் தாக்கரேவுக்கு சிக்கல்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
மும்பை : கொரோனா வைரஸ் பரவலால், மஹாராஷ்டிரா முதல்வர், உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு, கடந்த, நவ., 28ல் பதவியேற்றது. முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக இல்லை.அரசியல் சட்டப்படி, முதல்வராக பதவியேற்பவர், ஆறு
ChiefMinister,Maharashtra,UddhavThackeray,coronacrisis,உத்தவ்தாக்கரே,சிக்கல்

மும்பை : கொரோனா வைரஸ் பரவலால், மஹாராஷ்டிரா முதல்வர், உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு, கடந்த, நவ., 28ல் பதவியேற்றது. முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக இல்லை.அரசியல் சட்டப்படி, முதல்வராக பதவியேற்பவர், ஆறு மாதத்துக்குள், எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக தேர்வு பெற வேண்டும்.

உத்தவ் தாக்கரே, முதல்வராக பதவியேற்று, மே, 28ம் தேதியுடன் ஆறு மாதம் முடிகிறது. இப்போது, நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.இதனால், அரசியல் நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.

மஹாராஷ்டிராவில், ஒன்பது எம்.எல்.சி.,க்களின் பதவி காலம், வரும், 24ம் தேதி முடிகிறது. இதற்கான தேர்தல் நடக்கும் போது, எம்.எல்.சி.,யாக தேர்வாக, உத்தவ் திட்டமிட்டுஇருந்தார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக, எம்.எல்.சி., இடங்களுக்கான தேர்தல், எப்போது நடக்கும் என, தெரியவில்லை.

ஆறு மாதங்களுக்குள், எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி,யாக, உத்தவ் தேர்வாகவில்லை என்றால், அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அதன்பின், எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக தேர்வான பின் தான், அவர், முதல்வராக மீண்டும் பதவியேற்க முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
07-ஏப்-202019:38:26 IST Report Abuse
Poongavoor Raghupathy மகாராஷ்டிரா has got many more important issues than whether Uddav can continue as CM or not. Let us first get rid of Corona from Maharashtra and then we can think of Uddav. Already Uddav has come to power stabbing BJP at the back. If Uddav's presence helps us to get rid of corona we people wishing Uddav to continue as CM. These politicians must first think of corona today rather than their position. Uddav contribute for our State and its people and our people will put you in CMs chair. Before 14th April 2020 show us no death due to corona and new corona patients.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
05-ஏப்-202010:19:38 IST Report Abuse
blocked user நேர்வழியில் சென்றால் கண்டிப்பாக பாஜக வாக்குக்கள் கிடைக்காது. வேறு ஏதாவது செய்துதான் பதவியை தக்கவைக்கவேண்டும். அண்ணன் மோடியிடம் கூட வெட்கத்தை விட்டு கேட்கமுடியாது.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-ஏப்-202007:14:45 IST Report Abuse
Loganathan Kuttuva He will bring his son as CM
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X