குவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி; இந்தியர் உயிரிழப்பு

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020
Share
Advertisement
Kuwait, coronavirus, first death, COVID 19, covid 19 news updates, குவைத், கொரோனா,பலி

பஹ்ரைன்: குவைத்தில் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியானார். இது அந்நாட்டில் முதல் பலியாக பதிவானது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர். 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.


latest tamil news




முதல் பலி:


இந்நிலையில், குவைத்தில் நேற்று முதல் பலி பதிவானது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 46 வயதுள்ள இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நேற்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.


24 இந்தியர்களுக்கு..


இந்நிலையில் குவைத்தில் பணிபுரியும் 24 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்க தேசத்தை சேர்ந்த இருவர் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X