எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
North Korea, Coronavirus, president, Kim Jongun, coronavirus crisis, covid 19, கிம்,வடகொரியா,கொரோனா

சியோல் : 'எங்கள் நாட்டில், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால், ஒருவரைக் கூட கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை' என, வட கொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கிழக்காசிய நாடான தென் கொரியாவிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.

ஆனால், மற்றொரு கிழக்காசிய நாடும், சீனாவின் அண்டை நாடுமான வட கொரியாவில், கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என, அந்த நாட்டு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொரோனா விஷயத்தில் வட கொரியா, தொடர்ந்து பொய் தகவல்களை கூறி வருவதாகவும், பலியானோர் பற்றிய விபரங்களை மறைப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.


latest tamil news



இந்நிலையில், வட கொரியா நாட்டின் பேரிடர் தடுப்பு துறைக்கான இயக்குனர், பக் மியாங் சு, இது குறித்து கூறியதாவது: கொரோனா வைரஸ், சீனாவில் பரவத் துவங்கியதுமே, நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கி விட்டோம். மற்ற நாடுகளுடனான எல்லைகளுக்கு, 'சீல்' வைத்து விட்டோம். வெளிநாடுகளில் இருந்து, யாரும் வராதபடி, விமான, கப்பல் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

அதற்கு சற்று முன்னதாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்தோம். இதன் காரணமாக, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஏப்-202017:25:47 IST Report Abuse
Endrum Indian கொரோனா என்று எவனாவது சொன்னால் அவனை முதலில் தீர்த்துக்கட்டிவிடுவோம்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
05-ஏப்-202016:52:13 IST Report Abuse
Rajas இந்த கிம் ஒழிந்தால் தான் உலகிற்கு நிம்மதி. அப்போது தான் அந்த நாட்டு மக்கள் வளப்படுவார்கள். உலக மக்களுக்கு பெரும் பங்களிப்பை தர வேண்டிய ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் இவனால் தங்கள் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்கின்றன.
Rate this:
Cancel
05-ஏப்-202016:50:12 IST Report Abuse
ராஜேந்திரன் ஆமா இவரு விமான நிலையத்தை தொறந்து வச்சிட்டா மட்டும் வெளிநாட்டுல இருந்து வந்து குமிஞ்சிடப்போறாங்க.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X