பொது செய்தி

இந்தியா

பயண வரலாற்றை மறைத்தால் பாஸ்போர்ட் பறிமுதல்: அமரீந்தர் சிங்

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

சண்டிகர்: ‛பயண வரலாறு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கத் தவறியவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்,' என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.



latest tamil news


கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறும், தனிமைபடுத்தலை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், சிலர் தங்களின் பயண வரலாற்றை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அமைதி காப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் நிலைமையை மறுஆய்வு செய்வதற்கான மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

மேலும், கூட்டத்தில் அமரீந்தர் சிங் பேசியதாவது: போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தங்கள் பயண வரலாற்றை மறைப்பவர்கள் யாராக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்தவிதமான சமரசமும் இருக்க முடியாது. பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
05-ஏப்-202012:20:31 IST Report Abuse
mindum vasantham காங்கிரஸ் இல் ஒரு வீரர் இவரை காங்கிரஸ் தலைவரக்காலாம் குடும்ப அடிமை முறை மறையும்
Rate this:
Cancel
hare - bangalore,இந்தியா
05-ஏப்-202012:04:13 IST Report Abuse
hare Modi Bhakts Indulging in Cheap MalPropagandas
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஏப்-202011:06:04 IST Report Abuse
Natarajan Ramanathan நேற்று பப்பு மற்றும் பிரியங்கா இருவரும் ஒரே காரில் செல்லும்போது காவல்துறை தடுத்ததால் தங்களது நண்பர்களை பார்க்க செல்வதாகக்கூறி போலீசோடு இருவரும் தகராறு செய்துள்ளனர்.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-ஏப்-202014:57:57 IST Report Abuse
dandyபாஸ்போர்ட் ..மற்றொரு சங்ககால தமிழ்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X