பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்த பாதுகாப்பு வீரர்களுடன் அமித்ஷா பேச்சு

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
Amit Shah, Jawan, Army, Coronavirus, Home Minister, HM Shah, அமித்ஷா, கொரோனா வைரஸ், பாதுகாப்பு வீரர்கள், பாதிப்பு, பேச்சு, அழைப்பு

புதுடில்லி: கொரோனா பாதித்த பாதுகாப்பு படை வீரர்களுடன் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குணமடைந்ததும் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சேர்ந்த 11 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த முகாமில் துணை ராணுவத்தின் 152 வீரர்கள் முகாமில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து வீரர்களை பாதுகாப்பாக வைத்திருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், வீரர்களின் மன உறுதியை அதிகபடுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

இது தொடர்பான தொலைபேசி உரையாடலில் அமித்ஷா பேசியதாவது: நீங்கள் ஒரு நல்ல கடமையைச் செய்துள்ளீர்கள். நீங்கள் குணமடைய நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். நம்பிக்கையை இழக்காதீர்கள். மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். கடவுள் உங்களுக்கு உதவுவார். உறுதியுடன் இருங்கள் மற்றும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதற்கு பதிலளித்த வீரர், ‛ஐயா நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள், நாங்கள் கொரோனா வைரசை தோற்கடிப்போம்,' என பதிலளித்தார்.

பின்னர் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததும் தங்கள் வீட்டிற்கு வருமாறு அமித்ஷா அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலளித்த ஒரு வீரர், ‛நான் நிச்சயமாக உங்களை பார்க்க வருவேன். ஜெய்ஹிந்த் சார்,' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
05-ஏப்-202013:23:38 IST Report Abuse
தாண்டவக்கோன் "கொரோனா தோஷ கல்"லு மோதரங்க வெரல்ல பளபளங்கு 😮‼️
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
05-ஏப்-202013:19:48 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அமித் ஷா மற்றும் ராணுவப்படைகளைக் கிண்டல் பண்ணுறவங்களையும் ராணுவம் சேர்த்துப் பாதுகாக்குது
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
05-ஏப்-202014:01:25 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்மூடனே இந்த ஆறு வருடம் முன்னர் உன்னையும் கூட்டத்தையும் காத்தது காங்கிரஸ் மறவாதே...
Rate this:
Anandan - chennai,இந்தியா
05-ஏப்-202017:21:12 IST Report Abuse
Anandanபேசுனதுக்கு ?...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
05-ஏப்-202013:08:00 IST Report Abuse
ஆரூர் ரங் Vinoth . தலைநகரிலுள்ள சீனியர் ஊடகக்காரர்களில் 80% காங் ஆட்சிகாலத்தில் டெல்லியின் மைய்பகுதியில் அரசு பங்களாக்களை பரிசாகப் பெற்றவர்கள் . அவர்களுக்கு மோதியோ அமித்ஷாவோ பேட்டி கொடுக்கமாட்டார்கள் . ஊடக சந்திப்புகள் முடிந்தவுடன் பணக் கவர் வாங்க கியூவில் நிற்கும் நிருபர் களை நேரில் கண்டு நொந்திருக்கிறேன். தேசத்துரோகிகள்
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
05-ஏப்-202014:06:49 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்பாவம் அந்த உயிர்கள் ஆன்மாக்கள் உங்களை மன்னிக்கட்டும்...
Rate this:
Sriram Narashum L - Jamnagar,இந்தியா
05-ஏப்-202016:36:39 IST Report Abuse
Sriram Narashum Lபேசிக்கொள்கிறது -...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X