பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 3,577 பேருக்கு கொரோனா: 83 பேர் பலி

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
india, corono, coronavirus, healthministry,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, பலி, சுகாதாரஅமைச்சகம், அதிகரிப்பு, தமிழகம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,577 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 83 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3,577 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 83 ஆகவும் அதிகரித்துள்ளது. 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


latest tamil news



அதிகபட்சமாக

மஹாராஷ்டிரா - 661

தமிழகம் - 571 பேரும்,

கேரளா - 445

டில்லி - 306

தெலுங்கானா - 269

உ.பி.,- 227

ராஜஸ்தான் -200
குஜராத் - 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறுகையில், இந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 79 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது சராசரியாக 4.1 நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து வருகிறது. டில்லி மாநாடு நடக்காமல் இருந்திருந்தால், அது 7.1 நாட்களாக இருக்கும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-202008:54:59 IST Report Abuse
Tamilan CAA வுக்கு ஆதரவாக நாடு முழுவதிலுமிருந்து டெல்லி சென்றவர்கள், இப்போது இஸ்லாமிய மாநாட்டில் டெல்லியிலிருந்து விலைமதிக்கமுடியாத ஒன்றை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டுள்ளார்கள் .
Rate this:
Cancel
Sekar Suresh S - Chennai,இந்தியா
06-ஏப்-202007:59:49 IST Report Abuse
Sekar Suresh S total 83 people Died.
Rate this:
Cancel
06-ஏப்-202007:10:56 IST Report Abuse
ஆப்பு விளக்கேத்தி கொரோனாவை விரட்டியாச்சு... பாருங்க எண்ணிக்கை உயரவே இல்லை. அமெரிக்காவுக்கும் இதை பரிந்துரை செய்யலாம். அகல்விளக்கு ஏற்றுமதி செஞ்சு அசத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X