பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியா சேவை பெருமையளிக்கிறது: பாகிஸ்தான் பாராட்டு

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

புதுடில்லி: ஏர் இந்திய விமானங்கள், தங்கள் வான் பரப்பை பயன்படுத்த அனுமதி தந்திருக்கும் பாகிஸ்தான், அதோடு கொரோனா பெருந்தொற்று சமயத்தில், உங்களது சேவை பெருமையளிக்கிறது என பாராட்டும் தெரிவித்துள்ளது.latest tamil news


200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்றால், 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ஏப்ரல் 2-ம் தேதி, ஏர் இந்தியா நிறுவனம், மும்பையிலிருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு, நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டு விமானங்களை இயக்கியது. மும்பையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்ட இவ்விமானம், பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்து, அந்நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டது.


latest tamil news


ஆச்சர்யமளிக்கும் வகையில் அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்கும், கராச்சி கட்டுப்பாடு நிலையம், ஏர் இந்தியா நிவாரண விமானத்தை வரவேற்கிறது. இது போன்ற இக்கட்டான சூழலில், நீங்கள் விமானத்தை இயக்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று கூறியுள்ளனர். மேலும் கராச்சிக்கு மிக அருகில் ஏர் இந்தியா விமானத்தை பறக்க அனுமதித்துள்ளனர். இதனால் விமானத்தின் பயண நேரம் கணிசமாக குறைந்துள்ளது. ஈரான் எல்லைக்குள் நுழைந்த போது, அந்நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை ஏர் இந்தியாவால் தொடர்புகொள்ள முடியாமல் போயிருக்கிறது. அப்போதும் பாகிஸ்தான், தங்களுக்கு உதவியதாக ஏர் இந்தியா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் சிக்கியுள்ள தங்கள் நாட்டவர்களை திருப்பி அனுப்ப, ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து மற்றும் கனடா நாட்டு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக 18 விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்காக, டில்லி - ஷாங்காய் இடையே சரக்கு விமானங்களையும் ஏப்ரல் 9 வரை ஏர் இந்தியா இயக்குகிறது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - chennai,இந்தியா
08-ஏப்-202012:59:24 IST Report Abuse
saravanan ஆபத்து காலத்தில் தான் பொதுத்துறை நிறுவனங்களின் சேவையை உணரமுடிகிறது. இதுவே தனியார் நிறுவனம் என்றால் அரசின் கட்டளையை ஏற்று இது போல் செயல் பட்டிருப்பார்களா? பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்க முனைப்பு காட்டும் அரசு இதைப்பற்றியெல்லாம் யோசித்து முடிவுஎடுப்பது நாட்டுக்கு நல்லது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஏப்-202018:49:03 IST Report Abuse
மலரின் மகள் எப்போதும் ஏர் இந்திய எனது பாராட்டுக்குரியது தான். நிறைய முறை இதை எழுதி இருக்கிறேன். தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற நாட்டு தேசிய விமானங்களை ஒப்பிட்டும் அதில் நமது ஏர் இந்தியாவின் சேவைகளையும் ஒப்பிட்டே கூறி எழுதி இருக்கிறேன். நிறைய பேர் குறை கூறுவது வயதான ஏர் ஹோஸ்டஸ், கால தாமதம் என்று தான். இதனால் இவர்கள் எதோ பெரிதளவில் பாதிக்கப்பட்டதை போல. கூடுதலாக சுமைகளை ஏற்றி வருவதற்கு அனுமதிக்கிறார்கள். பெரும்பாலான மார்க்கங்களில் குறைந்த கட்டணம். பரவலான சேவை. எரிச்சலூட்டும் பயனியர்களுடனும் பல நேரங்களில் அமைதியாகவே நடந்து கொள்கிறார்கள். இண்டிகோ போன்று வேலை அடியாட்களை வைத்து தூக்கி வெளியில் யாரையும் வெளியில் தள்ளியதாக இல்லை. இலவசமாக இருக்கைகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். உணவு விற்பனைக்க்கு அல்ல. குடிநீர் மற்றும் பானங்கள் அனைத்தும் விற்பனைனைக்கு அல்ல. பிசினஸ் கிளாஸ் மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்தால் கூடுதல் வசதிகள் மற்ற விமானங்களை விட சிறப்பாகத்தான் இருக்கிறது. அண்ணாதுரையின் காலத்தில் நமது விமானம் எப்போது கிளம்பும் என்றால் எனிடைம் என்றில்லாமல் கிளம்பும் நேரம் பொதுவாக சரியாக இருக்கிறது, கால தாமதம் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. பல சிறப்புக்கள் உண்டு. அரசின் தலையீடு, அரசியல் பிரச்சினைகள் இல்லையென்றால் ஏர் இந்தியா சிறப்பாகவே செயல்படும். அதை சிறப்பாக செயல்படவிடாமல் தடுப்பது எது என்று இனம் கண்டுகொண்டாலும் அதை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது நிறுவனம். முக்கியமான காலகட்டங்களில் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் தங்களது இருக்கைகளை விற்று முடித்த பின்னரே ஏர் இந்தியாவின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டு அதன் பிறகு நிரப்ப படுகிறது. அனைவரின் டிக்கட்டுகளையும் விட ஏர் இந்தியாவின் டிக்கெட் விலை மிகவும் குறைவாக இருக்கும் இறுதி கட்டத்தில், முதலில் பதிவு செய்தால் டிக்கெட் விலை மிக அதிகம் இந்த காலகட்டத்தில் அனைத்து சேவை நிறுவனங்களும் தங்களின் டிக்கெட்டுகளை குறைத்து நல்ல லாபத்திற்கு விற்று விடுகிறார்கள். ஏர் இந்தியா அதை பற்றிய கவலை அற்றதாகவே இருக்கிறது. இந்த ஒரு விஷயத்தில் தனியார் மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு விட்டு கொடுத்து விடாமல் அவர்களுக்கு மிக பெரிய போட்டியை ஏர் இந்தியா உருவாக்கவேண்டும். அதன் பிறகு தெரியும் தனியார் நிறுவனங்களின் நிலை. குறிப்பாக இண்டிகோ தள்ளாடிவிடும். எடிகாட், எமிரேட்ஸ் போட்டியில் திக்கு முக்காடிவிடும்.
Rate this:
krishnan - salem,இந்தியா
06-ஏப்-202019:36:41 IST Report Abuse
krishnanஉங்கள் கருத்தை எற்றுக்கொள்ளுகிறேன். நான் UAE இல் அடுத்து செல்லும்போது ஒரு சிலர் சேவை சரியில்லை என்பார்கள். எனன சரியில்லை என்று கேட்டால் சாப்பிடு சரி இல்லை. பயணநேரம் அதிக பட்சம் 4 மணி நேரம் UAE அனைத்து ஏர்போர்ட்லயும் குறைந்த விலையில் உணவு கிடைக்கும். ஆனால் குறை சொல்ல பிறந்தவர்கள். முதலில் நாம் நமது விமானத்தை பயன்படுத்தினால். அவர்கள் சேவை விரிவு படுத்துவார்கள் உதாரணம் UAE இல் இருந்து கேரளாவுக்கு அனைத்து ஏர்போர்ட்க்கும் சேவை உண்டு . அது தெரிமால் சொத்துகக உரிமை இழப்பது நாம்தான்...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-ஏப்-202008:39:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni சமயத்திற்கு உதவ நல்லமனம் வேண்டும் என்பது முக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X