'புகை'க்கும் ஆண்களை கொரோனாவுக்கு பிடிக்கும்!

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்: உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்றால், பெண்களைவிட ஆண்களே அதிகமாக உயிரிழப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.



latest tamil news




கொரோனா வைரசால் உலகம் முழுவதிலும் இதுவரை, 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மனிதக் குலமும் அச்சத்தின் பிடியில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்களே என்பதும், அதிப்படியான உயிரிழப்புகளும் ஆண்களுக்கே ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


latest tamil news





மூன்று மடங்கு அதிகம்

கொரோனா வைரசால் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில், பலியானவர்களின் எண்ணிக்கைபடி, 71 சதவீத ஆண்களும் 29 சதவீத பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதனால், பெண்களைவிட மூன்று மடங்கு அதிகமாக ஆண்களே உயிரிழக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.


காரணங்கள் என்ன?


* பெண்களைவிட ஆண்களுக்கு மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.

* பெண்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கிறார்கள். ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் வைரஸ் தொற்றிற்கு உள்ளாகின்றனர்.
* வெளியில் சென்று வந்தால் ஆண்கள் கைகழுவுதல் உள்ளிட்டவற்றைக் கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டுகிறார்கள். பெண்கள், கைகழுவுவதை தீவிரமாகக் கடைபிடிப்பதால் வைரஸ் தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கின்றனர்.


latest tamil news



* ஆண்களுக்கு வைரஸ் அறிகுறி இருந்தாலும், விரைவில் மருத்துவமனை செல்வதில்லை. வைரசின் தீவிரம் அதிகரித்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
* மேலும், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருக்கும் மன தைரியம் ஆண்களிடம் இருப்பதில்லை.
* ஆண்களை விட, பெண்களின் ஹார்மோன்களில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். இதனால், பெண்களின் உயிரிழப்புகள் பெரும்பாலும் குறைகிறது.இவ்வாறான காரணங்களை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


latest tamil news




'கொரோனா வைரஸ் தொற்று, ஒருவரின் மூச்சுக் குழாயையும் நுரையீரலையும் தான் அதிகமாக பாதிக்கிறது. புகைபிடிக்கு பழக்கம் உள்ளவர்களுக்கு இயல்பிலேயே நுரையீரல் பாதிப்பு ஏற்படும்; நுரையீரல் பலவீனமாகவும் இருக்கும். அதனுடன் வைரஸ் தொற்றும் இணைந்தால் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிக்கிறது' என, உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது. இதனால், புகைபிடிக்கும் பழக்கம் அதிகமுள்ள ஆண்களே கொரோனாவுக்கு இரையாகின்றனர்.

எனவே, கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, சாதாரணமானவர்களை விடவும், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-ஏப்-202013:32:39 IST Report Abuse
A.George Alphonse பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், ஆண்களை எதிர்க்கும் சக்தியும் அதிகம் இருப்பதால் கரோனா வைரஸ் பாச்சா அவர்களிடம் பலிக்கவில்லை.பாவம் ஆண்கள் எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்கும் மனம் உள்ளவர்கள் அதனால்தான் இந்த கொடிய கரோனா வைரஸ் அவர்களை அதிகம் பதம் பார்த்து பழிவாங்கி விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X