நாக்பூர்: சமூக ஊடகங்களில் வெளிவரும் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் அல்லது செய்திகளில் 50 முதல் 80 சதவீதம் வரை 'போலி' என்று பெரும்பான்மையான மக்கள் கருதுவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், செய்தி சேனல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள், இ-பேப்பர்கள் உள்ளிட்டவைகள் மூலம் நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்கின்றனர். ஆனால், இவற்றில் பல போலியான செய்திகள் அல்லது வதந்தி அதிகளவு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து நாக்பூரின் ராஷ்டிரசாந்த் துக்கோஜி மகாராஜ் பல்கலையின் வெகுஜன தொடர்புத் துறையால் மார்ச் 28 முதல் ஏப்.,04 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வீட்டு தயாரிப்பாளர்கள் என கிட்டத்தட்ட 1,200 பேரிடம் நடத்தப்பட்டது.

கணக்கெடுப்பில், சமூக ஊடகங்களில் 50 முதல் 80 தகவல்கள் போலியானவை என 39.1 சதவீதத்தினரும், 80 சதவீதத்திற்கும் அதிகமான போலியென 10.8 சதவீதத்தினரும் கூறியுள்ளனர். மேலும், ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது தகவல் தவறானது என எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, 36.5 சதவீதம் பேர், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்டப்பின் இது தங்களுக்குத் தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளனர்.
பிற முக்கியமான செய்திகளை தவிர்த்து கொரோனா தொற்று பற்றிய செய்திகளை ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றனவா என்ற கேள்விக்கு 32.7 சதவீதத்தினர் ஆம் என்றும், 34.9 சதவீதத்தினர் ஊடகங்கள் நடுநிலை வகிக்கின்றதாகவும் கூறியுள்ளனர்.