வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை, 3,565 ஆக உயர்ந்துள்ளது.

We finally got some good news today.
The Chinese government helped facilitate a donation of 1,000 ventilators that will arrive in JFK today.
I thank the Chinese government, Jack Ma, Joe Tsai, the Jack Ma Foundation, the Tsai Foundation and Consul General Huang.
— Andrew Cuomo (@NYGovCuomo) April 4, 2020

நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளதாவது:
வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போதே நியூயார்க்கில் வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிப்பு அதிகரித்தால் நிலைமை மோசமாகிவிடும்.
இப்படியான சூழலில் அமெரிக்காவுக்குச் சீனா 1,000 வென்டிலேட்டர்களை அனுப்பி உதவியுள்ளது. அமெரிக்கா - சீனா இடையே பல்வேறு முரண்பாடுகள் நிலவும் நிலையிலும், அமெரிக்காவிற்கு சீனா உதவியுள்ளது. இதற்காக, சீனாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முகக்கவச ஏற்றுமதிக்கு தடை
இந்நிலையில், அமெரிக்காவின் '3எம்' நிறுவனம் தயாரிக்கும், 'என்95' ரக முகக் கவசங்களைக் கனடா மற்றும் லத்தீன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
'இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது. இது அமெரிக்க செய்யும் 'பெரும் தவறு' என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

'உலக நாடுகள் அனைத்தும் பகையை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவை அழித்தொழிக்க முடியும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதற்கு இணங்க, சீனா செயல்படுவது பாராட்டத்தக்கது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து நாடுகள் மீதும் பகையுணர்வுடன் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE