வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா ஸ்டாலின், கனிமொழி

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (278)
Advertisement
சென்னை: கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்கள் அனைவரும் இன்று (ஏப்.5) இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் மொபைல் போன்களையும் ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள்
corona, coronavirus, PmModi, Narendramodi, Stalin, Dmkchiefstalin, M.k.stalin, DmkchiefM.k.stalin, Kanimozhi, Mpkanimozhi, DmkMpkanimozhi, opposition leaders, கொரோனா, கொரோனாவைரஸ், பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, பிரதமர்நரேந்திரமோடி, திமுகதலைவர்ஸ்டாலின், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுகதலைவர்மு.க.ஸ்டாலின், திமுகஎம்.பி.கனிமொழி,கனிமொழி, எம்.பி.கனிமொழி, விளக்கு, எதிர்க்கட்சிதலைவர்கள்

சென்னை: கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்கள் அனைவரும் இன்று (ஏப்.5) இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் மொபைல் போன்களையும் ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil newsகொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மக்களின் ஒற்றுமையை காட்டுவதற்காகவும் இருள் சூழ்ந்த நாட்டில் ஒளியை பரப்புவதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இன்று இரவு ஒன்பது மணிக்கு அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஒளிரவிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டார். இதில் அனைவரின் எதிர்பார்ப்பு. திமுக தலைவர் ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக திமுக தலைவர்களுக்கும் மற்றும் சில எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் இந்துமத சடங்குகளின் மீது நம்பிக்கை கிடையாது. எப்போதும் நையாண்டி செய்து கொண்டிருப்பர். கொரோனா விஷயத்தில் மோடியின் வேண்டுகோளை இவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக எடுத்த எடுப்பிலேயே ஊரடங்கு பின்பற்றப்பட வேண்டும் என அறிவித்தார் மோடி. இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாட்டில் ஊரடங்கை அறிவித்து அதை வெற்றிகரமாக மக்களை பின்பற்ற வைத்ததற்கு மோடியை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஆச்சரியம் தெரிவிக்கின்றன.


latest tamil news


Advertisementlatest tamil news


இதுபோக, கொரோனாவை எதிர்த்துப் போராட மாநிலங்களுக்கு நிதி. மருத்துவம், உபகரணங்கள் போன்றவற்றையும் வழங்கி உள்ளார் மோடி. தினமும் பல்வேறு துறைகளை சேர்ந்த 200 பேருடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசி வருகிறார். அதாவது, அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு வார் ரூம் அமைத்து பணிபுரிந்து வருகிறார்.இது ஒருபுறம் இருக்க, மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தவும், பய உணர்வை போக்கவும் தான் வீடுகளில் விளக்கு ஏற்ற சொல்கிறார் மோடி. அவர் விடுத்த அழைப்பு, கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் வெல்ல வேண்டும் என்பதையே குறிக்கும். இதில் வேறு எந்த மத பழக்க வழக்கமும் இல்லை. இப்படி இருக்க, வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற மோடியின் அழைப்பை திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள். மோடியை ஒரு கட்சியின் தலைவராக பார்ப்பார்களா அல்லது இந்திய பிரதமர் என்ற முறையில் அவரது அழைப்புக்கு மரியாதை கொடுப்பார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி.


latest tamil news
latest tamil newsஏற்கனவே துாத்துக்குடி பிரச்னையில் மெழுகுவர்த்தியை ஏற்றியவர்கள் தான் இந்த ஸ்டாலினும் கனிமொழியும். உண்மையிலேயே கொரோனா ஒழியவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருந்தால் மோடியின் அழைப்பை ஏற்று அதன்படி செயல்படுவார்கள். இல்லாவிட்டால் கொரோனா ஒழிப்பில் இவர்களுக்கு உண்மையில் ஆர்வம் இல்லை, மக்கள் நலனில் அக்கறையும் இல்லை என்றுதான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (278)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
05-ஏப்-202020:46:30 IST Report Abuse
konanki பாரிஸில் wine தயாரிக்கும் காலத்தில் திராட்ச்சைள் திரை நடிகைகள் காலால் மிதித்து தயாரிக்கும் 'விஞ்ஞான முறை' இன்றும் உள்ளது. இவ்வாறு திரை நடிகைகள் காலால் மிதித்து sorry பாதம் பட்ட wine விலை மிக மிக அதிகம். இந்த விஞ்ஞான முறை தயாரித்த wine அருந்தும் நாட்டில் உள்ள சேனர் இந்தியாவை பற்றி கவலை வேண்டாம்.
Rate this:
Cancel
Balasubramanian Sundaram - NewYork,யூ.எஸ்.ஏ
05-ஏப்-202020:37:22 IST Report Abuse
Balasubramanian Sundaram நாம் எல்லோருமே பிறந்த நாளின் போது விளக்கை அணைக்கிறோம் . இனி ஏற்றுங்கள் .விளக்கு ஏற்றினால் ஆனந்தம் .எங்கும் வளம் .
Rate this:
Cancel
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,இந்தியா
05-ஏப்-202020:36:55 IST Report Abuse
moodi masthan beembai சரி நான் போய் காண்டா விளக்க ஏத்துறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X