பொது செய்தி

இந்தியா

ஊரடங்கில் கிராமப்புறங்களில் இணைய பயன்பாடு அதிகரிப்பு

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: ஊரடங்கு காலகட்டத்தில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை கொண்டிருக்கும் சி.எஸ்.இ. இ கவர்னன்ஸ் சர்வீஸஸ் இந்தியா தெரிவித்து இருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் 10 ம்தேதியளவில் 2.7 டேராபைட் ஆக இருந்த நிலையில் மார்ச் 30 ம் தேதி 4.7 டேராபைட்டாக அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கால கட்டத்தில் இது சாத்தியமாகி உள்ளது.

மேலும் இது குறித்து சிஎஸ்சி எஸ்பிவி தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் தியாகி கூறியதாவது:நாடு முழுவதிலும் 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்களில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ( பைபர் டு ஹோம் ) வசதிக்காக பதிவு செய்துள்ளனர். கிராம புறங்களில் இணைய பயன்பாடு அதிகரிப்பதுடன் ( பைபர் டு ஹோம் -க்கான தேவை அதிகமாக உள்ளது. 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மொபைல் இணைப்பிற்கு பதிலாக வைபையை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 60கோடிக்கும் அதிகமான இணைய பயனாளிகள் உள்ளனர். இதில் சுமார் 29 கோடி பேர் கிராமப்புறங்களில் உள்ளனர். இது கிராமப்புறங்களில் இணையத் தேவை அதகரித்துஇருப்பதை காட்டுகிறது. என கூறினார்.


latest tamil news



ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பிராட்பேண்ட் வசதியை வழங்கும் நோக்கில் மத்திய அரசு பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, மேலும் பஞ்சாயத்து அளவில் பரத்நெட்டை இயக்கவும், நிர்வகிக்கவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.எஸ்.சி எஸ்.பி.வி என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
05-ஏப்-202021:47:56 IST Report Abuse
Narayanan Muthu வேல வெட்டி இல்லாத அத்தனை பயலுவளும் வேற என்னதான் பண்ணுவது. நகரத்தில் இருந்து சொந்த கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு பொழுபோக்கே இணைய வழி சமூக வலைத்தளங்கள் தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X