பொது செய்தி

இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த பிரார்த்தித்து தீபம் ஏற்றிய இந்தியர்கள்

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
coronavirus, covid-19, lighting lamp, tourch light, mobile flash light, fight against corona, fight corona, nation's collective spirit,

புதுடில்லி: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரார்த்தனை செய்து இந்திய மக்கள் மட்டுமன்றி வெளிநாடு வாழ் இந்தியர்களும் மின் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.


latest tamil news



''கொரோனா வைரசை தோற்கடிக்கும் விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும். வரும், 5ம் தேதி(இன்று) இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்குகளை ஒளிரவிட்டு, நம் வலிமையை காட்ட வேண்டும்,'' என, பிரதமர், மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


latest tamil news


Advertisement



latest tamil news



latest tamil news




latest tamil news



இந்நிலையில், கொரோனாவால் மக்கள் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்துக்கு வர விளக்குகளை ஏற்றுங்கள் என்ற பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, இந்திய மக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து தங்கள் வீடுகளில் ஒளி விளக்குகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், மொபைல் போன் ஒளிகளை காட்டி தங்கள் ஒற்றுமையை மக்கள் வெளிப்படுத்தினர். விளக்கேற்றிய நேரத்தில் பல இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - chennai,இந்தியா
06-ஏப்-202006:43:55 IST Report Abuse
Ram திரு மோடி அவர்கள் ஒன்று சொன்னால் மக்கள் ஒன்பதாக செய்கிறரர்கள். மார்ச் 22போல. விசில் சத்தமும் பட்டாசு வான வேடிக்கையுமாக கொண்டாடி விட்டனர். ஏதோ நரகாசூரனை வென்று விட்டது போல. கொரோனா என்னும் நரகாசுரன் பல நாடுகளில் கோர தாண்டவத்தை ஆடி கொண்டு இருக்கிறான். நம் நாட்டிலும் தனது வேட்டையை பல படுத்தி கொண்டுஇருக்கிறான். இந்த நேரத்தில் இந்த கொண்டாட்டம் அவசியமா. பல உயிர்கள் இறந்துள்ள இந்த நேரத்தில் இது தேவையா. இப்படி கொண்டாடியதற்கு பதிலாக மக்கள் அமைதியான முறையில் விளக்கு ஏற்றியோ மெழுகுவர்த்தி ஏற்றியோ தம் மதத்திற்கு ஏற்றாற்போல் ப்ரார்த்தனை செய்து இருந்தால் அது நம் ஒற்றுமையையும் காட்டியதாக இருக்கும். கூட்டு பிரார்த்தனையாகவும் அமைந்து இருக்கும். நமக்காக மட்டும் அல்லாமல் இவ்வுலக மக்களுக்காகவும் நாம் இதை செய்து இருந்தால் மற்ற நாடுகளின் மத்தியில் நம் பிரதமர் மீதும் நம் மக்களின் மீது நல்ல மரியாதையும் இருந்து இருக்கும். மற்ற நாடுகளும் நமது கூட்டு பிரார்த்தனையை பின் பற்றி இருக்கும். Corona என்னும் கொடிய அரக்கனை இவ்வுலக மக்கள் ஒன்று சேர்ந்து வெற்றி கொள்ள வேண்டும். அதை விடுத்து ஏதோ அதனை வெற்றி கண்டது போல கொண்டாடினால் இறைவன் நிச்சயம் மனம் வருந்துவார்.
Rate this:
Cancel
swega - Dindigul,இந்தியா
06-ஏப்-202006:31:56 IST Report Abuse
swega இரவு 9 மணிக்கு எல்லா சானெல்லயும் போல இல்லாம நம்ம மாறன் நியூஸ் சேனல்ல மட்டும் மக்கள் மோடி சொன்னதை கேட்கலே, யாரும் விளக்கு பொருத்தலென்னு பீலா விட்டுக்கிட்டிருந்தானுக.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
06-ஏப்-202004:59:37 IST Report Abuse
ocean kadappa india வசூல் பண்ணவன் உன் ஆள்தானே தண்டம். வாங்கினால் அவன் எதையும் திருப்பி கொடுக்க மாட்டான். அதற்கு பகுத்தறிவு ஒத்துக்கொள்ளாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X