பொது செய்தி

இந்தியா

ஒற்றுமை தீபம் ஏற்றிய தலைவர்கள்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
light, leaders, தீபம், ஒற்றுமை, கொரோனா, மக்கள், தலைவர்கள்,

புதுடில்லி: கொரோனா தாக்தத்திலிருந்து இந்தியா மீண்டு வரவும், மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று இரவு 9 மணி முதல் 9 .09 வரை மின் விளக்குகளை அணைத்து தீபங்களை ஏற்ற மக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.


latest tamil newsபிரதமரின் வேண்டுகோளின் படி நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணியளவில் மின் விளக்குகளை அணைத்து தீபங்களை ஏற்றினர். நாட்டுமக்கள் மட்டுமில்லாது அரசியல் தலைவர்களும் தங்கள் இல்லங்களில விளக்கு ஏற்றினர்


latest tamil newsபிரதமர் மோடி டில்லியில் தனது இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இல்லத்தில் தீபம் ஏற்றினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டில்லியில் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார்.

மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்கள் இல்லங்களில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று தீபம் ஏற்றினர். பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவாடேகர் மத்திய அமைச்சர்கள் பலரும் நம்பிக்கை தீபம் ஏற்றினர். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இல்லத்தின் முன்பு விளக்கு ஏற்றினார்


latest tamil newsதமிழக முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் இணைந்து சமூக விலகலை கடைப்பிடித்து விளக்கு ஏந்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தீபம் ஏற்றினார். அமைச்சர்கள் எஸ்.பி.,வேலுமணி, செல்லூர் ராஜூ, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், பாண்டியராஜன், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் தங்களது இல்லங்களில் விளக்கேற்றினர்.


latest tamil newsசென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் வாசல் முன்பு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார்..புதுவை முதல்வர் நாராயணசாமியும் தனது வீட்டின் முன்பு நம்பிக்கை தீபம் ஏற்றினார்.
பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தனது இல்லத்தில் தீபம் ஏற்றினார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகத் நாக்பூரில் தலைமை அலுவலகத்தில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் , மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பி்ர்லா, ஆந்திர முதலவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆகியோரும் தங்களது வீடு முன் நின்று தீப ஒளி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
06-ஏப்-202008:26:24 IST Report Abuse
Sampath Kumar அய்யா சிவா குமார் சுடலை ,கமல் எல்லாம் உங்க விவீடு கொலை புறத்தில் ஏத்திட்டாங்க உனுக்குத்தான் கணு தெரியவில்லை கருதும் புரியவில்லை
Rate this:
Cancel
Ram - chennai,இந்தியா
06-ஏப்-202006:52:34 IST Report Abuse
Ram திரு மோடி அவர்கள் ஒன்று சொன்னால் மக்கள் ஒன்பதாக செய்கிறரர்கள். மார்ச் 22போல. விசில் சத்தமும் பட்டாசு வான வேடிக்கையுமாக கொண்டாடி விட்டனர். ஏதோ நரகாசூரனை வென்று விட்டது போல. கொரோனா என்னும் நரகாசுரன் பல நாடுகளில் கோர தாண்டவத்தை ஆடி கொண்டு இருக்கிறான். நம் நாட்டிலும் தனது வேட்டையை பல படுத்தி கொண்டு இருக்கிறான். இந்த நேரத்தில் இந்த கொண்டாட்டம் அவசியமா. பல உயிர்கள் இறந்துள்ள இந்த நேரத்தில் இது தேவையா. இப்படி கொண்டாடியதற்கு பதிலாக மக்கள் அமைதியான முறையில் விளக்கு ஏற்றியோ மெழுகுவர்த்தி ஏற்றியோ தம் மதத்திற்கு ஏற்றாற்போல் ப்ரார்த்தனை செய்து இருந்தால் அது நம் ஒற்றுமையையும் காட்டியதாக இருக்கும். கூட்டு பிரார்த்தனையாகவும் அமைந்து இருக்கும். நமக்காக மட்டும் அல்லாமல் இவ்வுலக மக்களுக்காகவும் நாம் இதை செய்து இருந்தால் மற்ற நாடுகளின் மத்தியில் நம் பிரதமர் மீதும் நம் மக்களின் மீது நல்ல மரியாதையும் இருந்து இருக்கும். மற்ற நாடுகளும் நமது கூட்டு பிரார்த்தனையை பின் பற்றி இருக்கும். Corona என்னும் கொடிய அரக்கனை இவ்வுலக மக்கள் ஒன்று சேர்ந்து வெற்றி கொள்ள வேண்டும். அதை விடுத்து ஏதோ அதனை வெற்றி கண்டது போல கொண்டாடினால் இறைவன் நிச்சயம் மனம் வருந்துவார்.
Rate this:
Cancel
06-ஏப்-202006:26:21 IST Report Abuse
ஆப்பு தலிவர்கள் எல்லாம் வேலை வெட்டியோடு சுபிக்ஷமாக இருக்கிறார்கள். ஒத்துமையா விளக்கேத்துகிறார்கள். இங்கே தமிழ்நாட்டிலும் சர்க்கரை ரேஷன் கார்டு வைத்துக்கொண்டு, ஆயிரம் ரூவா வேண்டாமென்று சொல்லி விட்ட கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். ஒத்துமையா விளக்கேத்துனாங்க. நானும் 15 லட்சம் போட்டதாலே சந்தோசமா விளக்கேத்தினேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X