கணக்கு எடுக்க வரும் அரசு ஊழியர்களுக்கு 'ஒத்துழைப்பு கொடுங்கள்!' தமிழக தவ்ஹீத் ஜமாத் அறிவுறுத்தல்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை: 'கொரோனா' வைரஸ் தொற்றை தடுக்க தமிழகம் முழுதும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 'கணக்கு எடுக்க வரும் அரசு ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது. 'இந்த கணக்கெடுப்பு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கானது அல்ல; கொரோனாவை தடுப்பதற்கானது' என அந்த அமைப்பு விளக்கமாக
Corona, Coronavirus, Covid-19, Tamil Nadu, Dawheed Jamaat, Health, Health Survey, TN government,  கொரோனா, கணக்கு, ஒத்துழைப்பு, தவ்ஹீத் ஜமாத் , அரசு, ஊழியர், அறிவுறுத்தல்

சென்னை: 'கொரோனா' வைரஸ் தொற்றை தடுக்க தமிழகம் முழுதும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 'கணக்கு எடுக்க வரும் அரசு ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது. 'இந்த கணக்கெடுப்பு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கானது அல்ல; கொரோனாவை தடுப்பதற்கானது' என அந்த அமைப்பு விளக்கமாக அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுதும் ஜாதி மத இன பாகுபாடின்றி வளர்ந்த வளரும் நாடுகள் என அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களையும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. நோய் தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகள் 'சீல்' வைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் வாயிலாக வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

முதியவர்கள் பெண்கள் குழந்தைகளிடம் இருமல் தும்மல் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பு அறிகுறி இருக்கிறதா என விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நோய் பரவலை தடுக்க தமிழக அரசு இந்த முன்னோடி திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த கணக்கெடுப்புக்கு சில இடங்களில் குறிப்பிட்ட சில மக்கள் ஒத்துழைக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில இடங்களில் சி.ஏ.ஏ. என்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கான கணக்கெடுப்பு நடத்துவதாக மக்களிடம் சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். அதனால் அப்பாவி மக்கள் பலர் கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்காமல் பிரச்னை செய்கின்றனர்.

எனவே மக்களின் அறியாமையை அகற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அனைத்து மத அமைப்பு நிர்வாகிகளுடன் அரசு தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் பேச்சு நடத்தினர். இதை தொடர்ந்து ஒவ்வொரு சமுதாய அமைப்பு சார்பிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் அதன் மாநில பொதுச் செயலர் முஹம்மது நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் முதியவர்கள் மற்றும் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கின்றனர்.

இது குடியுரிமை திருத்த சட்டம் போன்ற கணக்கெடுப்பு அல்ல. கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறியவும் பிறருக்கு நோய் பரவாமல் தடுக்கவும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே கணக்கெடுப்பு பணியாளர்கள் வீடுகளுக்கு வரும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒத்துழைப்பு அளித்து நோய் பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு உதவ வேண்டும்.

சமூக வலைதளங்களில் பரவும் மத வெறுப்புணர்வு தகவல்களை பார்த்து சிலர் அறியாமையால் சுகாதாரத் துறை கணக்கெடுப்புக்கு உதவாமல் போகலாம். இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இயக்கங்களிடம் அதிகாரிகள் முறையாக தெரிவித்தால் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க ஜமாத் நிர்வாகிகள் உதவுவர். கணக்கெடுப்புக்கு வருவோர் மத விரோத போக்கை காட்டுவதாக தெரிந்தால் அதையும் உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அனைத்து அமைப்புகள் ஒருமித்த முடிவு:

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் தப்லிக் - இ - ஜமாத் அமைப்புகளின் தலைவர்கள், காஜா மொய்னுதீன் பாகவி தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கொரோனா நோய் கிருமியை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மசூதிகளிலும் எந்த தொழுகையும் நடத்தாமல் உள்ள தற்போதைய நிலை ஊரடங்கு நீக்கப்படும் வரை தொடர வேண்டும். தமிழக சுகாதாரத் துறை சார்பில் வீடு தோறும் நடத்தும் ஆய்வுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
06-ஏப்-202023:07:33 IST Report Abuse
Sheri இது வெறும் பர்மலிட்டிக்காக எடுக்கப்படும் சர்வே போல் தெரிகிறது.
Rate this:
Cancel
K Ramesh - Frankfurt,ஜெர்மனி
06-ஏப்-202022:10:10 IST Report Abuse
K Ramesh ஊரில் உள்ள தாடிகாரன் அனைவரையும் உடனே செக் செய்ய வேண்டும், ஆகும் செலவு அனைத்தும் மார்க்கத்தில் வசூலிக்கவேண்டும்.
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
06-ஏப்-202020:02:43 IST Report Abuse
mohankumar இதற்காகத்தான் வீட்டில் அடங்கி இரு என்று அரசாங்கம் கத்தி கொண்டே இருந்தது. கரி சாப்பிடாவிட்டால் ஒருமாதம் செத்து போய் விடுவார்களா. அப்படி கரி பார்க்காதது போல கூட்டமா கூடி நின்னதை பார்த்தல் எங்கு கொண்டு போய் விடும் என பயமாக உள்ளது. சிறிதும் மக்கள் கவலை படவில்லை. வந்தவுடன் தான் தெரியும் பின்னர் என்ன வருந்தியும் பயன் இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X