அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லி கூட்டத்தில் தி.மு.க., பிரதமரிடம் ஸ்டாலின் உறுதி

Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 டில்லி கூட்டத்தில் தி.மு.க., பிரதமரிடம் ஸ்டாலின் உறுதி

சென்னை : 'பார்லிமென்ட் கட்சிகளின் கூட்டத்தில், தி.மு.க., பங்கேற்கும்' என, பிரதமர் மோடியிடம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று காலை, ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார். ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல் நலம் குறித்து, பிரதமர் விசாரித்தார். அவரது தாய் தயாளு உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார். பின், பிரதமர் மோடியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலின் விசாரித்தார். 'நாளை மறுநாள் நடைபெறும், பார்லிமென்ட் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க.,வுக்கு, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார்;

டி.ஆர்.பாலு பங்கேற்பார்.'நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, மத்திய அரசுக்கு வழங்குவோம்' என, பிரதமரிடம், ஸ்டாலின் தெரிவித்தார்.மேலும், 'மத்திய அரசு, அனைத்து இந்திய மக்களின் வாழ்க்கைக்கு அரணாக இருக்க வேண்டும்' என, பிரதமரிடம், ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதற்கு பிரதமர், 'மத்திய அரசு, கவனமாக செயல்பட்டு வருகிறது' என, உறுதி அளித்தார்.அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவும், ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
06-ஏப்-202013:04:41 IST Report Abuse
M.P.Madasamy முன்னாள்,இந்நாள் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பது கொரோனாவை நெகட்டிவ் ஆக்குவதற்கு செய்யப்படும் பாசிட்டிவ் ஆன செயலாகும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
06-ஏப்-202009:24:10 IST Report Abuse
 Muruga Vel ஆண்டிமுத்து தில்லியில் தான் இருக்கார் … தமிழ்நாட்டுக்குள்ள வர தடையோ ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X