டில்லி கூட்டத்தில் திமுக; பிரதமரிடம் ஸ்டாலின் உறுதி

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை: 'பார்லிமென்ட் கட்சிகளின் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும்' என பிரதமர் மோடியிடம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.பிரதமர் மோடி நேற்று காலை ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார். ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல் நலம் குறித்து பிரதமர் விசாரித்தார். அவரது தாய் தயாளு உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். பின் பிரதமர் மோடியின் உடல் நலம்
Parliament, Stalin Participate, DMK, பார்லி., கூட்டம்,திமுக,ஸ்டாலின், பிரதமர்

சென்னை: 'பார்லிமென்ட் கட்சிகளின் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும்' என பிரதமர் மோடியிடம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.



பிரதமர் மோடி நேற்று காலை ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார். ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல் நலம் குறித்து பிரதமர் விசாரித்தார். அவரது தாய் தயாளு உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். பின் பிரதமர் மோடியின் உடல் நலம் குறித்து ஸ்டாலின் விசாரித்தார்.



'நாளை மறுநாள் நடைபெறும் பார்லிமென்ட் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க.வுக்கு பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார்; டி.ஆர்.பாலு பங்கேற்பார். 'நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம்' என பிரதமரிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.



மேலும் 'மத்திய அரசு அனைத்து இந்திய மக்களின் வாழ்க்கைக்கு அரணாக இருக்க வேண்டும்' என பிரதமரிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதற்கு பிரதமர் 'மத்திய அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது' என உறுதி அளித்தார். அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
09-ஏப்-202018:58:51 IST Report Abuse
sundarsvpr ஆலோசனை வழங்குவோம் என்பதைவிட உறுதுணையாய் இருப்போம் என்று கூறிருக்கலாம் .அணைத்து இந்திய மக்கள் என்பதைவிட இந்திய மக்கள் என்று கூறிருந்தால் இதில் அனைத்தும் அடங்கிருக்கிறது. முக்கிய கோரிக்கை கொரானா பாதிப்பு முடியும் வரை புதிய தலைமுறை தந்தி போன்ற நிறுவனங்களின் விவாத மேடையில் கட்சி கலந்துகொள்ளாமல் இருப்பது..
Rate this:
karutthu - nainital,இந்தியா
12-ஏப்-202017:07:24 IST Report Abuse
karutthuஎந்த ஒரு ஊடகமும் விவாத மேடை நடத்த வேண்டாம் என அரசு உத்தரவு போடவேண்டும்...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
07-ஏப்-202009:36:26 IST Report Abuse
sankar ....வந்தா என்ன வரட்டா என்ன
Rate this:
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
06-ஏப்-202020:48:09 IST Report Abuse
C.Elumalai கூட்டத்திலிருந்து கண்டிப்பாக வெளிநடப்புசெய்ய மாட்டோம் என்று உறுதிமொழி தருவார்,சுடலைகான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X