சென்னை: 'பார்லிமென்ட் கட்சிகளின் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும்' என பிரதமர் மோடியிடம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று காலை ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார். ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல் நலம் குறித்து பிரதமர் விசாரித்தார். அவரது தாய் தயாளு உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். பின் பிரதமர் மோடியின் உடல் நலம் குறித்து ஸ்டாலின் விசாரித்தார்.
'நாளை மறுநாள் நடைபெறும் பார்லிமென்ட் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க.வுக்கு பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார்; டி.ஆர்.பாலு பங்கேற்பார். 'நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம்' என பிரதமரிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் 'மத்திய அரசு அனைத்து இந்திய மக்களின் வாழ்க்கைக்கு அரணாக இருக்க வேண்டும்' என பிரதமரிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதற்கு பிரதமர் 'மத்திய அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது' என உறுதி அளித்தார். அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.