பொது செய்தி

இந்தியா

20-40 வயதுக்குட்பட்டவர்களே கொரோனாவால் அதிக பாதிப்பு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Corona, Spread, age, கொரோனா,பரவல், வயது, பாதிப்பு

புதுடில்லி : 'நாட்டில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, 20 - 40 வயதுக்குட்பட்டவர்கள் தான்' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மிகவும் கவலைக்கிடம்:

நாட்டில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,500ஐ கடந்து விட்டது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர், லாவ் அகர்வால் கூறியதாவது:நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 42 சதவீதம் பேர், 21 - 40 வயதுக்குட்பட்டவர்கள்.

9 சதவீதம் பேர், 20 வயதுக்குட்பட்டவர்கள்; 33 சதவீதம் பேர், 41 - 60 வயதுக்குட்பட்டவர்கள். 17 சதவீதம் பேர் மட்டுமே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 58 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், மத்திய பிரதேசம், டில்லி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.


கடும் நடவடிக்கை:

கொரோனாவுக்கு இதுவரை, வயதானவர்கள் தான் பலியாகியுள்ளனர். அவர்கள், ஏற்கனவே, நீரிழிவு அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ உபகரணங் களின் விலையை, அனுமதிக்கப்பட்ட அளவை விட, எந்த சூழ்நிலையிலும் தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தக் கூடாது. கொரோனா வைரசால் நாடே பாதிக்கப்பட்டுள்ள போது, மருத்துவ உபகரணங்கள் விலை உயர்வை தடுக்க, அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


'பான்பராக்' மென்று துப்பாதீங்க!

புகையிலை பொருட்களை சாப்பிட்டு, அதை துப்புவதன் மூலம், கொரோனா அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது பற்றி, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகையில்லாத புகையிலை பொருட்களான, 'குட்கா, பான்மசாலா, பான்பராக்' போன்றவற்றை, வாயில் போட்டு மென்று, அதை பொது இடங்களில் துப்பவது, பலரது வழக்கமாக உள்ளது. இந்த எச்சில் வழியாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. அதனால், புகையில்லாத புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில், எச்சில் துப்பக் கூடாது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
06-ஏப்-202012:28:24 IST Report Abuse
Sridhar சுகாதார அமைச்சகம் எதை செய்யக்கூடாதுன்னு சொல்றத வச்சு சிலர் என்ன செய்யணும்னு கத்துக்குவாங்க போலருக்கே? தயவு செஞ்சு விலாவாரியா சொல்லாதீங்கய்யா
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
06-ஏப்-202009:32:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Mostly 20 tp 40 years age group only travelled abroad on company trips so it is quite natural. 90% of affected cases are foregn travellers remaing delhi attee. Very few people are affected locally. Don't spread wrong msgs
Rate this:
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
06-ஏப்-202004:30:34 IST Report Abuse
மண்ணாந்தை கூட்டுக குடும்ப அமைப்பை உடைத்தெறிய வந்த தேவ தூதன் கொரோனா. சுகாதார இயக்குனர் ஒரு பெட்டியில் சொன்னது போல, முதியவர்கள் தள்ளி இருக்க வேண்டிய நேரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X