பொது செய்தி

இந்தியா

மக்களின் நம்பகத்தை இழந்த சமூக ஊடகங்கள்; போலியாக பரப்பப்படும் தகவல்களால் எரிச்சல்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Corona, Virus, News, Fake, Social Media, கொரோனா, தகவல்கள்,போலி,சமூக ஊடகங்கள்

நாக்பூர் : கொரோனா வைரஸ் பரவல் குறித்து, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் போலியானவை என, மக்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் நாடு முழுதும் பரவியுள்ள நிலையில், மத்திய அரசின் ஊரடங்கு காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிஉள்ளனர்.


ஆய்வு:

இவர்களில் பலரும், வைரஸ் பாதிப்பு குறித்த செய்திகளை, சமூக ஊடகங்களில் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனால், கொரோனா பாதிப்பு குறித்து, சமூக ஊடகங்களில் வரும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து, நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரசாந்த் துகோஜி மகாராஜ் பல்கலை., சார்பில் மார்ச், ௨௮ முதல், ஏப்., ௪ வரை ஆய்வு நடத்தப்பட்டது.

மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள், சுயதொழில் செய்வோர், வீட்டில் இருக்கும் பெண்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா குறித்த செய்திகளை நாளிதழ்கள் மற்றும் இ - பேப்பர் மூலமாக அறிந்து கொள்வதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து, நாக்பூர் பல்கலை., தகவல் தொடர்பியல் துறை தலைவர், மோயிஸ் மன்னன் ஹக் கூறியதாவது: கொரோனா வைரஸ் குறித்து, சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விக்கு, அவற்றில், 50 முதல் 80 சதவீதம் வரை உண்மைக்கு புறம்பானவை என, 39.1 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். சமூக ஊடக செய்திகளில் ௮௦ சதவீதத்துக்கு அதிகமானவை போலியானவை என, ௧௦.௮ சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.


தகவல்:

இதன் மூலம், போலி செய்திகள் குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் உள்ளது தெளிவாகிறது. ஆனால், சிறிய எண்ணிக்கையிலானவர்கள், சமூக ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிந்து கொள்வதாக கூறினர்.ஒரு குறிப்பிட்ட செய்தி, போலியானது என, எப்படி அறிந்து கொள்வீர்கள் என, கேட்டதற்கு, 36.5 சதவீதம் மக்கள், 'அந்த செய்தி தொடர்பாக, அரசு அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படும் தகவல்களை கவனிப்போம்' என்றனர்.

இதன் மூலம் சுகாதாரம், காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பிற அரசு துறைகள் தரும் தகவல்கள், மக்களுக்கு முழுமையான நம்பிக்கை அளிக்கின்றன என்பது, தெளிவாகிறது. உலகில் நடைபெறும் மற்ற முக்கிய செய்திகளை விட, கொரோனா செய்திகளுக்கு அதிக முக்கியத்துவத்தை, ஊடகங்கள் அளிக்கிறதா என, கேட்கப்பட்டது. 34.9 சதவீதம் பேர், ஊடகங்கள் நடுநிலை வகிப்பதாகவும், 32.7 சதவீதம் பேர், கொரோனா செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

வேறு வழியின்றி கொரோனா செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று, 32.3 சதவீதத்தினர் பதில் அளித்தனர். ஊரடங்கின்போது, டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் செய்திகளை அறிந்து கொள்வது, 5.8 சதவீதமும், தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பது, 8 சதவீதமும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Deva Indiran - Doha,கத்தார்
07-ஏப்-202012:50:38 IST Report Abuse
Deva Indiran நீங்கள் சொல்லாத உண்மையை சோசியல் மீடியாவினால் அறிய முடிகிறது , மக்களுடன் நேரடியாக பேச முடிகிறது , செய்தி தாள், டிவி நியூஸ் மூலமாக பெரும் செய்திகள் ஒரு சார்பு , பொய் கலந்த , மக்களை வழி நடத்துகின்றன .ஒரு சில போலி செய்திகள் வந்தாலும் உண்மைகளை சோசியல் மீடியாவினால் அறிய முடிகிறது . கெட்டதை விட நன்மையே அதிகம் உண்டு .உங்கள் போன்றவர்களை விட அது மிக சிறப்பானது . ஜல்லி கட்டு யாரால் பெரிதாக பட்டது ..உங்களுக்கு தெரியும் ..நீங்கள் வாயை மூடி இருந்த பொது அந்த சோசியல் மீடியாதான் ஊருக்கு உரக்க சொன்னது.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
06-ஏப்-202022:06:21 IST Report Abuse
தமிழ் மைந்தன் தமிழகத்தில் 100 சதவீதம் சமூக அக்கறையுள்ள உண்மையான செய்திகளை கொடுப்பது எந்த ஊடகமும் இல்லை........பாலிமர் டிவி மற்றும் தினமலர் பத்திரிகை இவைகளில் ஒரு சதம் கூட சமூக கெடுதல் இல்லை.........ஏனைய (பாரதி விமர்சித்த ) ஊடகங்கள்...பாரதியின் கருத்துபடியே உண்மையாக செயல்படுகிறது............
Rate this:
Cancel
vimalvimal55 - coimbatore,இந்தியா
06-ஏப்-202015:23:01 IST Report Abuse
vimalvimal55 அருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X