சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

போலீசாருக்கு, 'டோஸ்' விட்ட விழுப்புரம் எஸ்.பி.,

Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 போலீசாருக்கு,  'டோஸ்' விட்ட விழுப்புரம் எஸ்.பி.,

கொரோனா பாதித்தால் மரணம் தான் என்ற ரீதியில் போலீசார் நடத்திய தவறான விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் பார்த்த எஸ்.பி., போலீசாரை கடிந்து கொண்டார்.விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில், போலீசார் சார்பில், கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

டவுன் டி.எஸ்.பி., சங்கர் தலைமையிலான போலீசார், அந்த வழியே, பைக்குகளில் வந்த நபர்களைப் பிடித்து நிறுத்தினர். அவர்கள் முன்னிலையில் போலீசார் பிரசாரம் செய்தனர். 'கொரோனா பாதித்தால், அடுத்து சங்கு தான்' என்ற ரீதியில் பிரசாரம் இருந்தது.

இது வாகன ஓட்டிகளிடையே, கடும் பீதியை ஏற்படுத்தியது.அந்த வழியே வந்த எஸ்.பி., டென்ஷன் அடைந்து, 'யோவ்... என்னய்யா, சங்கு, கிங்குன்ட்டு... நாமெல்லாம் பாதுகாப்பா பிரசாரம் செய்யிறோம்ன்னு, 'கெத்து' காட்டுறீங்களா... அதே ஆபத்தோட தான் நாமும் இருக்கோம்... கவனமா பேசுங்க... பீதி கிளப்பாதீங்க...' என்றதும், மற்ற போலீசார், உதறல் எடுத்து, பிடித்த பைக் வண்டிக்காரர்களை, வேக வேகமாக அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnathambi - chennai,இந்தியா
06-ஏப்-202011:38:41 IST Report Abuse
chinnathambi அப்படி சொன்னாலே கேட்காத இளைஞர்கள் பாசமாகவும் நெசமாகவும் சொன்னால் புரிந்து கொள்வார்களா எஸ் பி சார்? சிலருக்கு சில பாஷை தான் புரியும். எல்லோருக்கும் மரணம் ஒன்று தான் பயம் ஏற்படுத்தும். அது பீதியை கிளப்புவது அல்ல சில காவல் துறை நண்பர்கள் வீட்டில் சென்று இவ்வாறு சொல்ல வில்லையே ஊரடங்கு அமலில் இருக்கும் போது அதை பற்றி கவலை படாமல் தெருவில் நடமாடும் இளைஞர்களோ முதியவர்களோ அவர்களிடம் தானே கூறினார்கள். பொது இடத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறினால், அடிக்க கூடாது, திட்ட கூடாது அன்பாக பேச வேண்டும் என்றெல்லாம் சொல்வது மிகவும் எளிது. ஆனால் வைரஸ் ரொம்ப வேகமாக அல்லவா பரவிக்கிட்டு இருக்கு.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஏப்-202006:23:30 IST Report Abuse
D.Ambujavalli அனாவசியமாக ஊர் சுற்றினால் வைரஸை விலை கொடுத்து வாங்குவது போல நீங்களும் உங்கள் குடும்பங்களும் நலமாக இருக்க வேண்டும் அல்லவா ? என்பது வேறு, இப்படி ஊர் சுற்றி யமனை ஊருக்கே அழைத்து வருகிறீர்களே என நெகடிவாக எச்சரிப்பது வேறு டி எஸ் பி விவரமானவர்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X