நிதி நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
delhiush, coronavirus, corona, centralgovernment, government, PmModi, Narendramodi, PMNarendramodi, Modi, foreigntour, stategovernments, president, vicepresident, MP, delhi, raja, a.raja, DMKmpraja, admk, sasikala, dinakaran, EPS, cmeps, edapadipalanisamy,  deputycmpaneerselvam, ops, deputycmops, கொரோனா, கொரோனாவைரஸ், சிக்கனநடவடிக்கை, பிரதமர்மோடி, மோடி, பிரதமர்நரேந்திரமோடி, மோடி, மாநிலஅரசுகள், ஜனாதிபதி, துணைஜனாதிபதி, விமானப்படைவிமானம், வெளிநாட்டுபயணம், தொகுதிமேம்பாட்டுநிதி, எம்.பி., எம்.எல்.ஏ.,   திமுக, எம.பி.,  ராஜா, ஆ.ராஜா, அதிமுக, தினகரன், சசிகலா, முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர்பன்னீர்செல்வம், ஒபிஎஸ், எடப்பாடிபழனிசாமி

கொரோனா வைரஸ் பரவலால், நாட்டில் கொண்டு வரப்பட்ட, 21 நாள் ஊரடங்கு, சாமானிய மக்களுக்கு பிரச்னை ஏற்படுத்தியிருப்பதோடு, பெரும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், இதை சமாளிக்க, பிரதமர் மோடி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அரசு தரப்பில் பணத்தைச் சேமிக்க, அவர் பல அதிரடி முடிவுகளை எடுக்கப் போகிறார்.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பயணம் செய்ய, விமானப் படையின் சிறப்பு விமானம் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கான செலவு, பல கோடி ரூபாயைத் தாண்டும். இந்த விமானத்தை, அடுத்த மூன்று மாதங்களுக்கு பயன்படுத்துவதில்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களும், அடுத்த மூன்று மாதங்களுக்கு, மாநில பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எம்.பி.,க்கும், தங்கள் தொகுதியை மேம்படுத்த, ஆண்டிற்கு, 5 கோடி ரூபாய் தரப்படுகிறது. இதனால், அரசுக்கு, ஒரு ஆண்டிற்கு, 2,700 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகுதி நிதி திட்டத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு யோசித்து வருகிறது.எம்.பி.,க்களுக்கு மட்டுமல்லாமல், எம்.எல்.ஏ.,க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இதையும் நிறுத்த வேண்டும் என, மாநிலங்களுக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது. அடுத்து, எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வு ஊதியத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், முதல்வர்கள் மற்றும் மாநில தலைமைச் செயலர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கு முடிந்த உடன், அனைத்து மாநிலங்களும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


டில்லியில் மாட்டிக் கொண்டதமிழக எம்.பி.,க்கள்


நாடு தழுவிய ஊரடங்கால், தமிழக,எம்.பி.,க்கள் நால்வர், டில்லியில் சிக்கிக் கொண்டுள்ளனர். விமானம், ரயில் என, எந்த போக்குவரத்தும் இல்லாததால், இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை.நாட்டில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மற்ற எம்.பி.,க்கள், தங்கள் தொகுதிகளுக்கு சென்று, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால், இந்த நால்வரும், தொலைபேசி வாயிலாக கட்சி தொண்டர்களுடன் பேசி, தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்ய உத்தரவிட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடனும், டில்லியில் இருந்தே பேசி வருகின்றனர்.இந்த நான்கு எம்.பி.,க்களில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும் ஒருவர். ராஜாவிற்கு உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றுபவர் தர்மலிங்கம். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, ராஜாவே இவரை, தன் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சையில், 'பிசி'யாக இருந்தனர்.

முன்னாள் அமைச்சர் என்பதால், ஒரு டாக்டர் முன்வந்து, தர்மலிங்கத்திற்கு உடனடியாக, 'ஆப்பரேஷன்' செய்து பிழைக்க வைத்தார். ஆப்பரேஷன் முடியும் வரை, எட்டு மணி நேரம் மருத்துவமனையிலேயே காத்திருந்தாராம் ராஜா. ராஜா இல்லாவிட்டால், தனக்கு எந்த டாக்டரும் சிகிச்சை அளித்திருக்கமாட்டார் என, நன்றிக் கண்ணீர் வடிக்கிறார் தர்மலிங்கம்.


சசிகலா, தினகரன் மீண்டும் அ.தி.மு.க.,வில்?


கொரோனா பரவலையடுத்து கொண்டு வரப்பட்ட ஊரடங்கால், அனைத்து வேலைகளும் முடங்கிக் கிடந்தாலும், சில அரசியல் விவகாரங்கள், குறிப்பாக, தமிழக அரசியல் தொடர்பான ஒரு விஷயம், டில்லியில் அதிரடியாக நடந்து வருகிறது.பா.ஜ.,வின் இரண்டு சீனியர் தலைவர்கள், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்,அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கப்பது தான் இந்த தலைவர்களின் வேலை.மறைந்த, அ.தி.மு.க., தலைவி, ஜெயலலிதா இருந்த போது, அக்கட்சி எப்படி இருந்ததோ, அதே உறுதியுடன், அடுத்த ஆண்டு வரும் சட்டசபை தேர்தலைசந்திக்க வேண்டும் என்பது, இந்த தலைவர்களின் ஆசை. இதற்காக, சசிகலா மற்றும்தினகரனை, மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைக்க, பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.இது தொடர்பாக, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் பேசப்பட்டு வருவதாக, அந்த பா.ஜ., தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஒருங்கிணைந்த அ.தி.மு.க., தேர்தலை சந்தித்தால், வெற்றி நிச்சயம் என, அவர்கள் கருதுகின்றனர்.இந்த இணைப்பு குறித்து, ஆகஸ்ட் மாதத்திற்குள் நல்ல செய்தி வரும் என, பா.ஜ.,வினர் எதிர்பார்க்கின்றனர். இந்த முயற்சி, மேலிடத்தின் அனுமதியுடன் தான் நடக்கிறதாம்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பால சுப்பிரமணியன் அ. பிரதமர் மோடி அவர்கள் எடுக்க இருக்கும் சிக்கன நடவடிக்கைகள் பாராட்டுக்குறியவை. இவைகளுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக கிடைக்கும்.மேலும் மக்கள் தேர்ந்தெடுத்து சிறு பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை ஆட்சிக்கு வரும் பல்வேறு நிலை அங்கத்தினர்களுக்காக ஆகும் சிலவை கணிசமாக குறைக்க வேண்டும்.
Rate this:
Cancel
பாலசுப்பிரமணியன் அ. பிரதமர் மோடி அவர்கள் கூறும் சிக்கன நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை. இந்த ஊரண்டகை தளர்த்தினால் கூட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில வருஷங்களாகும். அதுவரை நாட்டின் பாதுகாப்பு, விவசாயம், அத்யாவசிய சிறு தொழில் தவிர வேறு சிலவு செய்வதற்கு அரசாங்கத்தினால் இயலாது.ஆகவே சிக்கனம் மிக மிக அவசியம்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13-ஏப்-202006:31:45 IST Report Abuse
 nicolethomson இவங்க தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதுதான் பல்லை இலிக்குதே , எதற்கு காசை வேஸ்ட் பண்றீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X