நிதி நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
  நிதி நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் பரவலால், நாட்டில் கொண்டு வரப்பட்ட, 21 நாள் ஊரடங்கு, சாமானிய மக்களுக்கு பிரச்னை ஏற்படுத்தியிருப்பதோடு, பெரும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், இதை சமாளிக்க, பிரதமர் மோடி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.


latest tamil news
அரசு தரப்பில் பணத்தைச் சேமிக்க, அவர் பல அதிரடி முடிவுகளை எடுக்கப் போகிறார்.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பயணம் செய்ய, விமானப் படையின் சிறப்பு விமானம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவு, பல கோடி ரூபாயைத் தாண்டும். இந்த விமானத்தை, அடுத்த மூன்று மாதங்களுக்கு பயன்படுத்துவதில்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களும், அடுத்த மூன்று மாதங்களுக்கு, மாநில பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எம்.பி.,க்கும், தங்கள் தொகுதியை மேம்படுத்த, ஆண்டிற்கு, 5 கோடி ரூபாய் தரப்படுகிறது. இதனால், அரசுக்கு, ஒரு ஆண்டிற்கு, 2,700 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகுதி நிதி திட்டத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு யோசித்து வருகிறது.

எம்.பி.,க்களுக்கு மட்டுமல்லாமல், எம்.எல்.ஏ.,க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இதையும் நிறுத்த வேண்டும் என, மாநிலங்களுக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது. அடுத்து, எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வு ஊதியத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில், முதல்வர்கள் மற்றும் மாநில தலைமைச் செயலர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கு முடிந்த உடன், அனைத்து மாநிலங்களும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
10-ஏப்-202001:44:16 IST Report Abuse
தமிழ் வேந்தன் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லை என்ற கருத்தின் மூலம் கவர்னரை நீக்கினால் பல கோடிகள் மிச்சமாகும்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஏப்-202015:31:50 IST Report Abuse
g.s,rajan Modiji please waive the INCOME TAXES for the monthly salaried People,TDS should not be deducted from their Income. g.s.rajan Chennai.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
06-ஏப்-202023:00:23 IST Report Abuse
m.viswanathan இந்த ஆண்டு அனைவர்க்கும் வருமான வரி பிடித்தம் குறைந்த சதவிகிதத்தில் செய்யலாம் , முதியோருக்கு முழுவதுமே பிடிக்காமல் விடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X