பொது செய்தி

தமிழ்நாடு

மூட்டைகளை முதுகில் சுமந்த தாசில்தார்: வைரலாகும் வீடியோ

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
Relief material, Tamil Nadu, India, Coronavirus, Corona, COVID-19, viral video

கோவை :கோவையில் நிவாரண பொருட்களாக வந்த அரிசி மூட்டைகளை, தாசில்தார் முதுகில் சுமந்த 'வீடியோ' வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில், 'கொரோனா' காரணமாக பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவை தாலுகா அலுவலகங்களில் இறக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து ரேஷன் கடைகள் வாயிலாக, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.இந்த நிவாரண பொருட்கள் நேற்று மதியம் கோவை வடக்குதாசில்தார் அலுவலகத்துக்கு மினி லாரியில் வந்து இறங்கியது.அப்போது வடக்கு தாசில்தார் மகேஷ்குமார் நிவாரண மூட்டைகளை தாமாக முன்வந்து ஊழியர்களுடன் சேர்ந்து, தனது முதுகில் சுமந்துசென்றார். இதை அங்கிருந்த ஊழியர்கள் சிலர் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


latest tamil news




தாசில்தார் மகேஷ்குமாரிடம் கேட்டபோது, ''நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது. இந்த நேரத்தில், தாசில்தார், ஊழியர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. மக்கள் சேவையே முக்கியம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
06-ஏப்-202023:21:41 IST Report Abuse
m.viswanathan லஞ்சம் ஒன்றே குறிக்கோளாக உள்ள அரசு அதிகாரிகளில் இப்படி ஒருவரா ஆச்சரியம் , வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Cancel
06-ஏப்-202014:54:51 IST Report Abuse
பாலமுருகன் சூப்பர் சார்
Rate this:
Cancel
மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
06-ஏப்-202011:52:13 IST Report Abuse
மோகன் வாழ்த்துக்கள் சார். நினைக்கவே பெருமையாக இருக்கிறது.
Rate this:
chidambaram - Chennai,இந்தியா
07-ஏப்-202005:33:48 IST Report Abuse
chidambaramகொரோனாவிற்கு ஒரு விதத்தில் நன்றி சொல்லணும். போலீஸ் காரர்கள் டாக்டர்கள் துப்புரவு பணியாளர்கள் இவர்கள் எல்லாம் மனித நேயம் மிக்கவர்கள் என புரிய வைத்தது. யார் இந்த சமயத்தில நமக்கு உதவி செய்யல என்பதையும் நமக்கு புரியவைத்தது. போலீஸ் காரர்கள் டாக்டர்கள் துப்புரவு பணியாளர்கள் யார் பணி உயர்ந்தது என மதிப்பிடவே முடியாது. வாழ்த்துபவர்களை சிலர் விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என கேலி செய்வது வேதனையாக உள்ளது. அவர்கள் செய்தது விளம்பரத்திற்காக என்றாலும்கூட அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் இதைப்போல நாமும் செய்யவேண்டும் என நினைக்க தோன்றுகிறதல்லவா. இவர்கள் எதை செய்தாலும் குறை சொல்லுபவர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X