பயண விபரங்களை தர மறுப்பதா? காஷ்மீர் போலீசார் புது வியூகம்| J&K police launches drive to find people hiding travel history | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயண விபரங்களை தர மறுப்பதா? காஷ்மீர் போலீசார் புது வியூகம்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (13)
Share
Traval history, coronavirus, kashmir, covid19, corona, Jammu and Kashmir, J&K, Police, காஷ்மீர்,கொரோனா,பயணவிவரம்

ஸ்ரீநகர் : தனிமை முகாம்களில் வசிக்கத் தயங்கி, தங்கள் பயண விபரங்களை தெரிவிக்காமல், 'டிமிக்கி' கொடுப்போரை கண்டுபிடிக்க, காஷ்மீர் போலீசார் அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர். பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் உளவுத் துறை வியூகத்தை, இதற்காக பயன்படுத்துகின்றனர்.


உளவுத் துறை:


கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த பலர், ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன், வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. பயண விபரத்தை தெரிவித்தால், தனிமை முகாம்களில், 14 நாட்கள் வசிக்க வேண்டும் என்பதால், இது குறித்த விபரங்களை போலீசாருக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் தெரிவிக்காமல், இவர்கள் மறைப்பதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சுகாதார துறை அதிகாரிகள், காஷ்மீர் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். இதன்படி, 1,000க்கும் அதிகமானோர், வெளிநாடுகளுக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் யார் என்பதை கண்டறிய, காஷ்மீர் போலீசார், உளவுத் துறையில் பின்பற்றப்படும் வியூகத்தை கையில் எடுத்துள்ளனர்.


latest tamil news
தகவல்:


காஷ்மீரில், பயங்கரவாதிகளை கண்டறிவதற்காக, அந்தந்த பகுதியில் உள்ள போலீசாருடன், உளவுத் துறை போலீசார், தொடர்ந்து தகவல்களை கேட்டறிவது வழக்கம். சம்பந்தப்பட்ட பகுதிக்கு புதிதாக வந்தோர், சந்தேகத்திற்குரிய நபர்கள் ஆகியோரை பற்றி, அவர்களது அருகில் வசிப்போர், தொடர்பில் உள்ளோரிடம், போலீசார் ரகசியமாக தகவல்கள் சேகரிப்பர் .தற்போது, வெளிநாடு சென்று வந்தவர்களை கண்டறிவதற்கும், போலீசார் இதே வியூகத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


மொபைல் மூலம் தகவல் சேகரிப்புடில்லியில், மத மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்டறிவதற்காக, மொபைல் போன் தகவல் தொகுப்புகளை பயன்படுத்த, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட நாட்களில், அந்த இடத்தில் இருந்தவர்களை, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X