கொரோனா அமெரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடுவது ஏன்?

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
coronavirus, corona, covid-19, America, US, China, சீனா,அமெரிக்கா,கொரோனா,வைரஸ்,கோவிட்19

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தியதற்கான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 3.37 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,610 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் அதிவேகமாக பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவுவது ஏன் என 'நியூயார்க் டைம்ஸ்' கட்டுரை வெளியிட்டுள்ளது.


latest tamil news



அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின், சீனாவிலிருந்து 4.3 லட்சம் மக்கள், நேரடி விமானம் மூலம் அமெரிக்கா வந்தது தான், அமெரிக்காகவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட காரணம். வூஹானிலிருந்து மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடி விமானம் மூலம் அமெரிக்கா வந்தனர்.


latest tamil news



சீனாவிலிருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் 17 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கத்துவங்கும் முன்பே, சுமார் 4 லட்சம் பேர் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்துவிட்டார்கள். அப்போது விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரமாக இல்லாததால் அவர்கள் எளிதில் அமெரிக்காவிற்குள் வந்துவிட்டார்கள்.


latest tamil news



ஜன., பிற்பகுதியில் தான் அமெரிக்கா விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியது. அதற்கு முன் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த, சுமார் 3.81 லட்சம் பயணிகளில் எத்தனை பேருக்கு கொரோனா இருந்தது என தெரியவில்லை. இதுதான் அங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த காரணம். இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஏப்-202016:34:12 IST Report Abuse
Endrum Indian உலக மக்களை அழிக்க பயோ வெப்பன் என்னும் கொரோனாவின் பிறப்பிடம் அது சீனா அது எப்படி உலகம் பூராவும் பரவும். அப்போ உலகத்தில் எந்த நாட்டிற்கும் எல்லை இல்லையா???இல்லை காற்றில் பரவியது???அது தான் காற்றில் பரவாது, சில மணி நேரங்கள் கழித்து அது பலமிழந்து இறந்து விடும் என்றெல்லாம் பரப்பினார்களே??இதன் அர்த்தம்???அப்போ கரோனாவை ஏதோ ஒரு கும்பல் ஊர் ஊராக பரப்ப நம்ம தப்லிக் டில்லி மாதிரி முடிவு செய்து நல்ல திட்டம் போட்டு செயல்படுத்தப்பட்டது என்று தான் இதன் அர்த்தம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
07-ஏப்-202008:31:07 IST Report Abuse
Sampath Kumar இந்த உலக தாதா உதய் வாங்கும் நேரம் இது ஆயுதங்களை மட்டுமே விற்று அடுத்தவன் வயிற்றில் அடித்து பிழைப்பு நடத்தும் அமெரிக்காவிற்கு ஆண்டவன் தக்க படம் புகட்டுவான்
Rate this:
Cancel
Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202000:48:31 IST Report Abuse
Muthuraman ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஊர்சுற்றுவது, கேளிக்கை விழாக்கள் கொண்டாடுவது,பீச்சில் கூட்டம்கூட்டமாக சுற்றுவது, சமூக அக்கறை இல்லாமல் இருப்பது,இது என்ன செய்யும் என்று இளக்காரமாக கருதுவது, ஆகியவை தான் இந்த அளவில் கொரானா தாக்கம் அமெரிக்காவில் அதிக அளவில் இருப்பத்திற்கான காரணங்கள். ஆரம்பத்தில் வெள்ளை மாளிகையோ அல்லது அரசு அதிகாரிகளோ இதைப்பற்றி அதிக அக்கறை எடுக்காததினால் தான் இன்று இந்த அளவு அதிக மனித இழப்புகள். .இன்னும் இங்கு மக்கள் கொரோனா பற்றி சரியாக புரிந்துகொள்ள வில்லை..நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை..எல்லா மாநில அரசாங்கங்களும் ஸ்டே அட் ஹோம் ஆர்டர் போட்டாலும், மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை..நோயாளி வருகை ஹாஸ்பிடல் படுக்கை எண்ணை விட அதிகமாக உள்ளது..எல்லா அரசாங்கங்களும் இப்போது அதிக அளவில் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனாலும் போதுமான மெடிக்கல் சப்ளை இன்னும் பற்றாக்குறை தான்..மே மாத இறுதிக்குள் மனித இழப்பு சுமார் ஒரு லட்சத்தை தாண்டும் என வெள்ளை மாளிகை மருத்துவ குழு சொல்கிறது...பயமாக தான் உள்ளது. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X