டில்லியில் மாட்டிக் கொண்டதமிழக எம்.பி.,க்கள்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
Tamil Nadu, MP, Member of Parliament, Delhi

நாடு தழுவிய ஊரடங்கால், தமிழக,எம்.பி.,க்கள் நால்வர், டில்லியில் சிக்கிக் கொண்டுள்ளனர். விமானம், ரயில் என, எந்த போக்குவரத்தும் இல்லாததால், இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை.நாட்டில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மற்ற எம்.பி.,க்கள், தங்கள் தொகுதிகளுக்கு சென்று, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆனால், இந்த நால்வரும், தொலைபேசி வாயிலாக கட்சி தொண்டர்களுடன் பேசி, தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்ய உத்தரவிட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடனும், டில்லியில் இருந்தே பேசி வருகின்றனர். இந்த நான்கு எம்.பி.,க்களில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும் ஒருவர். ராஜாவிற்கு உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றுபவர் தர்மலிங்கம். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, ராஜாவே இவரை, தன் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.


latest tamil news




டாக்டர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சையில், 'பிசி'யாக இருந்தனர்.முன்னாள் அமைச்சர் என்பதால், ஒரு டாக்டர் முன்வந்து, தர்மலிங்கத்திற்கு உடனடியாக, 'ஆப்பரேஷன்' செய்து பிழைக்க வைத்தார். ஆப்பரேஷன் முடியும் வரை, எட்டு மணி நேரம் மருத்துவமனையிலேயே காத்திருந்தாராம் ராஜா. ராஜா இல்லாவிட்டால், தனக்கு எந்த டாக்டரும் சிகிச்சை அளித்திருக்கமாட்டார் என, நன்றிக் கண்ணீர் வடிக்கிறார் தர்மலிங்கம்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
06-ஏப்-202019:15:04 IST Report Abuse
Siva Kumar இந்த நேரத்திலும் ரஜ்ஜாக்க்கு விளம்பரம் தேவையா?
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
06-ஏப்-202016:36:04 IST Report Abuse
sri ஒரு பக்கம் கோடிக்கணக்கில் பொதுச்சொத்தை கொள்ளை அடிப்பது , இன்னொருபக்கம் மனிதாபத்துடன் மக்களிடம் நடந்து நல்ல பெயர் சம்பாதிப்பது - இது கலைஞர் 67 இல் ஆட்சிக்கு வந்தது முதல் கடைபிடித்த பார்முலா . அதையே தி மு க வில் உள்ள அனைவரும் தொடர்ந்து செய்வது. பொதுச்சொத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் , இவர்களுடைய மனிதாபிமான செய்கைகளை பத்து பேர் விலாவாரியாக விளக்குவார்கள் என்னவோ, தீனிக்கு தானி சரி போயிந்தி என்பது போல தமிழ்நாட்டில் கொள்ளை அடிப்பது கூட ரூம் போட்டு யோசித்து செய்வார்கள். விஞ்ஞான முறை ஊழல் என்பது இதுதான்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
06-ஏப்-202016:17:47 IST Report Abuse
Baskar தமிழ் அவசரம் வேண்டாம். தேர்தலுக்கு முன் எப்படியும் முடிவு தெரிந்து விடும். கவலை வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X