பாக்.,தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பாக்.,கின் லாகூரில் கடந்த மார்ச்சில் தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சீனா, இந்தோனேசியா, நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தரப்பில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், லாகூரில் நடந்த ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பஞ்சாப்பின் ராவல்பிண்டி, நன்கானா சாகேப், சர்கோதா, வெஹாரி, பைசலாபாத், கலாஷா காகு மற்றும் ரஹிம் யார் கான் போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலிருந்தும் பெரும்பாலானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின. 5 நைஜீரிய பெண்கள் உட்பட 50 பேர் கொரோனா தொற்று இருப்பதற்கான சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சிந்து பகுதியிலும் 50 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக லாகூரின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் இந்த மாநாடு நடத்த அரசு தடை விதித்துள்ளது. அதனை மீறி இந்த கூட்டத்தில் பல நாடுகளிலிருந்தும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கூட்டம் நடந்த பகுதிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் வேறு யாரெல்லாம் பங்கேற்றார்கள், அவர்களுக்கு தொற்று நோய் உள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
06-ஏப்-202018:01:33 IST Report Abuse
Kannan பாகிஸ்தான் ஒரு காரோண வைரஸ் நாடு தான்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
06-ஏப்-202015:40:57 IST Report Abuse
unmaitamil முஸ்லிம்களுக்கு சோதனை தேவை இல்லை என்று விரும்பினால், அவர்களை விட்டுவிடலாமே என சொல்லுவது மடமையில் உச்சம். காரோண இவர்களுடன்மட்டும் நிற்காது. விரைவாக எல்லோருக்கும் பரவி நம் எல்லோரையும் அழித்துவிடும். வருமுன் காப்பதுதான் அறிவு. அல்லது சோதனைக்கு விருப்பமில்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் அவர்கள் அனுமதித்தால். இல்லாவிடில் ராணுவத்தை அழைத்து நாலு மிதி மிதித்து இழுத்து செல்லவேண்டும்.
Rate this:
Cancel
06-ஏப்-202013:39:05 IST Report Abuse
நக்கல் இவங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது... தீவிரவாதத்தை பரப்புவதற்கே மதத்தையும், கடவுளையும் கையில் எடுக்கிறார்கள்... இவர்கள் கூட்டம் கூடுவதே கொரோனாவை பரப்பத்தான்... இதை ஒரு தீவிரவாதத்துக்கு பயன்படும் ஆயுதமாக உபயோகிக்கிறார்கள்... இவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்க வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X