போரிஸ் ஜான்சன் குணமடைவார்: டிரம்ப் நம்பிக்கை

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா பாதித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், குணமடைவார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மட்டும் இதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9616 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி
Donald Trump, Boris Johnson, America, Coronavirus, Trump, Britain, UK, Prime Minister, President, UK PM, American president, corona, covid-19, world fights corona, அமெரிக்கா, அதிபர், டிரம்ப், பிரிட்டன், பிரதமர், போரிஸ் ஜான்சன், கொரோனா, வைரஸ், பாதிப்பு

வாஷிங்டன்: கொரோனா பாதித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், குணமடைவார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மட்டும் இதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9616 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு, 25,316 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 1,165 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் மட்டும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மற்ற உலக நாடுகள் மேற்கொண்டதை விட அதிகமாகும். ஒரு சுரங்கப்பாதையில் தெரியும் சிறிய வெளிச்சம் போல, நாங்கள் செய்துள்ள பணிகளால் பெருமையடைவோம்.


latest tamil news


அபாட் என்னும் ஆய்வகம் மூலம் 15 நிமிடத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிகிறது. வாரத்திற்கு 1200 பேர் இதுமூலமாக சோதிக்கப்படுகிறது. 300 மில்லியன் கையுறைகள், 8 மில்லியன் மாஸ்க்குகள், 3 மில்லியன் கவுன்கள் மற்றும் இன்னும் பல முக்கியமான பொருட்கள் இப்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. கொரோனா பாதித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எனது நண்பர், சிறந்த மனிதர், சிறந்த தலைவர். வலிமையான நபரான அவர், நலமாக இருப்பார், குணமடைவார் என உறுதியாக இருக்கிறேன். அவருக்காக அனைத்து அமெரிக்கர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202008:39:51 IST Report Abuse
ஆப்பு இன்னிக்கி க்ளோரோக்வின் மருந்து சாப்பிட்டீங்களா?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஏப்-202011:21:09 IST Report Abuse
 Muruga Velஎதுக்கும் ஆப்பு….. வெச்சுக்கிட்டு சாப்பிடறது நல்லது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X