பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை: சிதம்பரம் வரவேற்பு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
coronavirus, corona, P chidambaram, chidambaram, PM Modi, Modi, opposition leaders, COVID-19, PC, மோடி, பிரதமர்மோடி, எதிர்க்கட்சிதலைவர்கள், ப.சிதம்பரம், சிதம்பரம், வரவேற்பு

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதற்கு முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் வெளியிட்ட டுவீட்:இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முக்கியமான இரண்டு வார காலகட்டத்திற்குள் நுழைகின்றன. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது நல்ல விஷயம். கொரோனாவை எதிர்க்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சிகள் குறை கூறினால், அதனை ஆக்கப்பூர்வமானதாக எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
latest tamil news


கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, பிரதமர் மோடி, நேற்று முன்னாள் ஜனாதிபதிகள் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், திமுக தலைவர் ஸ்டாலின், அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-ஏப்-202019:30:31 IST Report Abuse
RajanRajan உன் பிரச்சினையே அடிக்கடி நீதான் அதிமேதாவின்னு வர்ற நினைப்பு இருக்கே அதுதான்.
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
06-ஏப்-202018:57:14 IST Report Abuse
s.rajagopalan ப சி ......எல்லோரும் உன்னை இப்படி திட்டும்படி வச்சிட்டு கூசாமல் நாள்தோறும் முந்திரிக்கொட்டை மாதிரி எதாவது ரீல் வுட்டுக்கினே கீறியே ? எப்படி ஐயா இப்படி ? கொஞ்ச நாள் கம் னு இருங்களேன்
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
06-ஏப்-202016:42:02 IST Report Abuse
kalyanasundaram மே பெ ஹி வான்டஸ் TO HUMILIATE HIMSELF FOR SELF PROTECTION BY PRAISING MODIJI . BUT HE IS IMMATURE TO STUDY MODIJI. SHOTLY HE MAY BE BEHIND BAR AND HIS ILLEGAL WEALTH REACH RESERVE BANK
Rate this:
G.Kirubakaran - Doha,கத்தார்
06-ஏப்-202018:49:20 IST Report Abuse
G.Kirubakaranசிதம்பரம் மட்டுமே காங்கிரஸ் ல் இருந்து அப்போ அப்போ வாய்ஸ் கொடுக்கிறார் . நானும் ஜெயிலிருக்கு போறேன் கதை தான். அது சரி அந்த பதினஞ்சு ஆயிரம் கோடி என்ன தான் பண்ணுவார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X