பொது செய்தி

இந்தியா

கொரோனா போரில் வென்ற வீரர்கள்: கேரளா ‛டாப்'

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
Coronavirus, Recovery Rate, Kerala, Corona, Covid-19, corona recovery, corona cases, health கொரோனா, வைரஸ், மீண்டவர்கள், குணமடைந்தவர்கள், கேரளா, முன்னிலை, மாநிலம்

திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிக விகிதத்தில் குணமடைந்திருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,577 பேர் பாதிக்கப்பட்டு, 275 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 748 பேரும், தமிழகத்தில் 571 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 62 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் மாநில வாரியாக கொரோனா நோயாளிகள் குணமடைந்தது தொடர்பான புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.


latest tamil news



நேற்று (ஏப்.,05) காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிக விகிதத்தில் குணமடைந்திருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. ஜன.,30 முதல் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், கிட்டத்தட்ட 17 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இதுவரை 2 பேர் மட்டுமே கேரளாவில் தொற்றின் காரணமாக இறந்துள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில், மஹாராஷ்டிரா 5.5 சதவீதமும் (35 பேர்), டில்லி 4.04 சதவீதமும் (18 பேர்) மீண்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை துரிதமாக பரிசோதனை மேற்கொண்டு வருவதே, குணமடைந்தவர்களின் விகிதத்தில் கேரளா முன்னிலையில் இருக்க காரணம் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.G.RAMAN - MADURAI,இந்தியா
06-ஏப்-202017:53:30 IST Report Abuse
N.G.RAMAN இந்தியாவில் ஒரு வடகொரியா
Rate this:
Cancel
janakiraman - bangalore,இந்தியா
06-ஏப்-202015:19:54 IST Report Abuse
janakiraman டெல்லியிலிருந்து.வந்த படைகளை உள்ளே விடவில்லை எல்லோரும் தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆகிவிட்டார்கள் .கேரளாவில் உள்ள தினகூலி வேலை செய்பவர்களை துரத்தி விட்டார்கள் பாக்கி இருப்பவர்கள் எவ்வளவு பேர் .
Rate this:
Cancel
Siva - Chennai,இந்தியா
06-ஏப்-202015:03:01 IST Report Abuse
Siva கேரளாக்காரர்கள் சுதாரித்து விட்டார்கள் ஆனால் நம்மவர்களோ மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதிலேயே காலம் தள்ளுகின்றனர் .நாமும் சுதாரித்துக்கொண்டாள் நமக்கு நல்லது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X